இமானை ஒரு ஜென்டில்மேன் ஆகத்தான் பார்க்கிறேன் - பிரபு தேவா!
ப்ளூ ஹில் பிலிம்ஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் ஜோபி பி சாம் தயாரிப்பில், இயக்குநர் எஸ். ஜெ. சினு இயக்கத்தில், பிரபுதேவா கதையின் நாயகனாக நடித்திருக்கும் `பேட்ட ராப்` படத்தின் இசை வெளியீடு சென்னையில் நடைபெற்றது.
இயக்குநர் எஸ். ஜே. சினு இயக்கத்தில் உருவாகி இருக்கும் 'பேட்ட ராப்' எனும் திரைப்படத்தில் பிரபுதேவா, வேதிகா, சன்னி லியோன், மைம் கோபி, ரமேஷ் திலக், பகவதி பெருமாள், விவேக் பிரசன்னா, ரியாஸ் கான், ராஜீவ் பிள்ளை, ஜெயப்பிரகாஷ் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். ஜீத்து தாமோதர் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு டி. இமான் இசையமைத்திருக்கிறார். முழு நீள குடும்ப பொழுதுபோக்கு சித்திரமாக தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தை ப்ளூ ஹில் புரொடக்ஷன்ஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் ஜோபி பி. சாம் தயாரித்திருக்கிறார். இந்த திரைப்படத்தை சஃபையர் ஸ்டுடியோஸ் வெளியிடுகிறது. இம்மாதம் 27ஆம் தேதியன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகும் இந்த 'பேட்ட ராப்' எனும் திரைப்படத்தின் இசை வெளியீடு சென்னையில் உள்ள நட்சத்திர ஹோட்டலில் பிரம்மாண்டமாக நடைபெற்றது. இந்த விழாவில் படக்குழுவினருடன் இயக்குநர் பேரரசு சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.
மேலும் படிக்க | தனுஷின் அடுத்த படத்தில் டாப் ஹீரோயின்! த்ரிஷா இல்லை..நயன்தாரா இல்லை..வேறு யார்?
இயக்குநர் பேரரசு பேசுகையில், '' இயக்குநர் சினு படப்பிடிப்பு தளத்தில் மிக வேகமாக பணியாற்றினர். 'பேட்ட ராப்'- 90களில் இந்தியா முழுவதும் ஒலித்த பாடல். பேட்ட ராப் ஒரு வெற்றிகரமான வார்த்தை. முப்பது ஆண்டு கழித்து அந்த வார்த்தையை தலைப்பாக கொண்டு ஒரு படத்தை உருவாக்கி இருக்கிறார்கள். அதிலும் பிரபுதேவா கதாநாயகனாக நடித்திருக்கிறார். பிரபுதேவா முப்பது ஆண்டுகளாக கதாநாயகனாகவே தொடர்ந்து நடித்து வருகிறார் என்றால்.. அது மிகப்பெரிய விசயம். அவருடைய நடனத்தின்போது ரசிகர்கள் அவருக்கு எலும்பு இருக்கிறதா? இல்லையா? என பேசிக்கொள்வார்கள். இப்போது வரை எலும்பு வளரவில்லை என்றே நினைக்க தோன்றுகிறது. அவரிடம் ஏற்பட்டிருக்கும் ஒரே ஒரு மாற்றம்.. அவருடைய தாடியில் நரை தென்படுகிறது. ஆனாலும் அவர் ஆற்றலுடன் நடித்தும் வருகிறார். நடனமாடியும் வருகிறார்.
நடிகை சன்னி லியோன் பேசுகையில், ''இந்த படத்தில் நடனமாடுவதற்காக வாய்ப்பளித்த இயக்குநருக்கும், தயாரிப்பாளருக்கும் நன்றி. பிரபுதேவா உடன் இணைந்து நடனமாடியது மறக்க இயலாத அனுபவம். இந்தப் படத்தில் பணியாற்றிய அனைவருக்கும் என்னுடைய வாழ்த்துக்கள். இந்தத் திரைப்படத்தை அனைவரும் திரையரங்கத்திற்கு சென்று ரசிக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்'' என்றார். நடிகை வேதிகா பேசுகையில், '' நீண்ட நாட்கள் கழித்து தமிழில் நடித்திருக்கிறேன். நீண்ட நாட்கள் கழித்து தமிழில் இந்தப் படத்தில் நிறைய பாடலுக்கு நடனமாடி இருக்கிறேன். இதுவரை நடிப்புத் திறமை வெளிப்படுத்தும் கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறேன். இந்த திரைப்படத்தில் தான் நாட்டியமாடுவதற்கான வாய்ப்பு கிடைத்தது. அதிலும் பிரபு தேவா மாஸ்டர் உடன் இணைந்து நடனம் ஆடுவதற்கு வாய்ப்பு கிடைத்தது" என்றார்.
நடிகர் பிரபுதேவா பேசுகையில், ''இந்த படத்தில் பணியாற்றும் போது படத்திற்கான முன்தயாரிப்பு பணிகள், படப்பிடிப்பு தளம்.. என அனைத்தும் மனதிற்கு மகிழ்ச்சியான அனுபவத்தை அளித்தது. படப்பிடிப்பு தளம் முழுவதும் மகிழ்ச்சியாகவும், உற்சாகவும் இருந்தது. ரமேஷ் திலக், விவேக் பிரசன்னா, பக்ஸ், வையாபுரி, ஜே பி ஆகியோருடன் இணைந்து பணியாற்றியதும் சந்தோஷமாக இருந்தது. இமான் ஏற்கனவே தனது திறமையை நிரூபித்திருக்கிறார். ஆனால் எனக்கு அவர் ஒரு ஜென்டில்மேன் ஆகத்தான் பார்க்கிறேன். அவருடைய பெருந்தன்மை எனக்கு மிகவும் பிடிக்கும். அவர் எப்போதும் பாசிட்டிவ்வானவர். இந்தப் படத்திற்கும் அவர் நல்ல பாடல்களையும், இசையும் வழங்கி இருக்கிறார்.
நடிகை வேதிகா கடும் உழைப்பாளி. ஒவ்வொரு காட்சிக்கும் தன்னை நன்கு தயார்படுத்திக் கொண்டு வருவார். திறமையான நடிகை. இல்லையென்றால் இயக்குநர் பாலா படத்தின் வாய்ப்பு கிடைத்திருக்குமா..! அவருடைய கடும் உழைப்பை இந்தப் படத்தில் நேரில் கண்டு வியந்து இருக்கிறேன். அவருக்கும் இந்த தருணத்தில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். சன்னி லியோன் நடிகை என்பது கடந்து அனைவரையும் நேசிப்பவர். மதிப்பவர். அவர் தன்னுடைய அறக்கட்டளைகள் மூலம் ஏராளமான உதவிகளை செய்து வருகிறார். செப்டம்பர் 27ஆம் தேதியன்று 'பேட்ட ராப்' வெளியாகிறது. இதற்காக முதலில் இயக்குநர் ஷங்கருக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். ஏனெனில் இந்த வார்த்தையை எழுதியவர் அவர்தான். அதனுடன் இந்தப் பாடலுக்கு இசையமைத்த ஏ ஆர் ரஹ்மானுக்கும் இந்த தருணத்தில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்'' என்றார்.
மேலும் படிக்க | Premgi : பிரேம்ஜிக்கும் அவரது மனைவிக்கும் உள்ள வயது வித்தியாசம்! அம்மாடி..இவ்வளவா?
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ