வம்சி பைடிப்பள்ளி இயக்கத்தில் தளபதி விஜய் நடிக்கும் வாரிசு படம் தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய இருமொழிகளில் வெளியாகவுள்ளது.  இப்படத்தின் படப்பிடிப்பு மும்முரமாக நடைபெற்று வருகிறது, தற்போது படக்குழு விசாகப்பட்டினத்தில் படப்பிடிப்பை நடத்தி வருகின்றது.  சமீபத்தில் படப்பிடிப்பிற்காக சென்னை விமான நிலையத்திலிருந்து நடிகர் விஜய் விமானம் ஏற வரிசையில் நின்ற புகைப்படம் ஒன்று வெளியாகி இணையத்தில் வைரலானது.  அதற்கு முன்னர் இப்படத்தின் படப்பிடிப்பு தளத்திலிருந்து புகைப்படம் ஒன்று வெளியாகி அதுவும் இணையத்தில் பயங்கர ட்ரெண்டானது.  இந்நிலையில் தற்போது வாரிசு படத்தின் இசையமைப்பாளர் தமன் பகிர்ந்துள்ள புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இசையமைப்பாளர் தமன் விசாகப்பட்டினம் துறைமுகத்தின் படப்பிடிப்பு தளத்தில் இருந்து எடுத்த தனது புகைப்படம் ஒன்றை சமூக வலைதள பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.  வாரிசு படத்தில் இசையமைப்பாளராக தமன் ஒப்பந்தமானதில் இருந்தே பல பல அப்டேட்டுகளை அள்ளி வீசி வருவதோடு, சில புகைப்படங்களையும் பகிர்ந்து வருகிறார்.  இந்த படம் தான் விஜய்யுடன், இசையமைப்பாளர் தமன் இணைந்து பணியாற்றும் முதல் திரைப்படமாகும்.  படத்தின் படப்பிடிப்பு பணிகள் மும்முரமாக நடைபெற்று வரும் நிலையில் அக்டோபர் மாதம் படத்தின் டீசரை படக்குழு வெளியிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.  ஏற்கனவே வாரிசு படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை தயாரிப்பாளர்கள் வெளியிட்டு அது ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது.



மேலும் படிக்க | VICTIM ஆந்தாலஜி எப்படி இருக்கு? திரைவிமர்சனம்!


மேலும் இந்த படத்தில் விஜய் இரட்டை வேடங்களில் நடிப்பதாக சில தகவல்கள் தெரிவிக்கிறது.  குடும்ப செண்டிமெண்ட் நிறைந்த கதையம்சம் கொண்டதாக உருவாகும் இந்த படத்தில் ரஷ்மிகா மந்தனா, சரத்குமார், ஷாம், பிரபு, ஸ்ரீகாந்த், எஸ்.ஜே. சூர்யா, பிரகாஷ் ராஜ், ஜெயசுதா, யோகி பாபு, சங்கீதா கிரிஷ் மற்றும் சம்யுக்தா போன்ற பல நட்சத்திர பட்டாளங்கள் இணைந்து நடித்துள்ளனர்.  இந்த படம் அடுத்த ஆண்டு பொங்கல் பண்டிகையையொட்டி வெளியாகவுள்ளது.



மேலும் படிக்க | புஷ்பா-2 படத்தில் விஜய் சேதுபதிக்கு மனைவியாக தேசிய விருது நடிகை?


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ