தன் முதல் படத்திலேயே பார்வையாளர்களை ‘அடடா’ சொல்ல வைத்த இயக்குநர்களுள் ஒருவர், ஷங்கர். இவர் இயக்கத்தில் வெளிவந்த பெரும்பாலான படங்கள் மாஸ் ஹிட் அடித்துள்ளன. ஒரு சில படங்கள் மட்டுமே ரசிகர்களை ஈர்க்க தவறியுள்ளன. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

30 ஆண்டுகளை கடந்த ஷங்கர்..


‘பிரம்மாண்ட இயக்குநர்..’ என்று கூறினாலே முதலில் நினைவிற்கு வருவது இயக்குநர் ஷங்கர்தான். பிரம்மாண்டம் என்றால் பெரும் பொருட் செலவில் படங்களை தயாரிப்பது மட்டுமல்ல, அதற்கு ஏற்றவாறு தரமான, ‘பிரம்மாண்டமான’ கதையை தயாரிப்பதிலும் கெட்டிக்காரர் இவர். ஷங்கர் இயக்கத்தில் அர்ஜுன் நடித்திருந்த ஜெண்டில் மேன் திரைப்படம் வெளியாகி சரியாக 30 வருடங்கள் ஆகிறது. தனது படங்களில் பெரும்பாலும் சமூகத்திற்கு தேவையான கருத்துகளை தெரிவிக்கும் ஷங்கர், ஜெண்டில் மேன் படம் மூலமாகத்தான் அதற்கு பிள்ளையார் சுழி போட்டார். ஜீன்ஸ், சிவாஜி, அந்நியன் போன்ற பல படங்கள் மூலம் இவர் புதுமை காட்டியிருந்தாலும், ரசிகர்கள் என்னவோ ஒரு படத்தைதான் இவர் படைப்புகளிலேயே சிறந்தது என கூறுகின்றனர். அது என்ன படம் தெரியுமா..? 


மேலும் படிக்க | சாலை விபத்தில் சிக்கி இளம் நடிகர் மரணம்..! சோகத்தில் ரசிகர்கள்..!


இந்தியன்:


‘உலக நாயகன்’ என ரசிகர்களால் அழைக்கப்படும் கமல்ஹாசன் ஹீரோவாக இரு வேடங்களில் நடித்திருந்த படம், இந்தியன். இந்த படம் 1996ஆம் ஆண்டில் வெளியாகியிருந்தது. இப்படத்தில் மொத்தமாக ஊழலில் மூழ்கிய மகனாகவும் ஊழலைத்தடுக்க ‘இந்தியன் தாத்தா’வாக மாறும் வயதான தோற்றத்திலும் கமல் நடித்திருப்பார். இப்படத்தின் திரைக்கதை இன்றளவும் பல இளம் இயக்குநர்களுக்கு வேறொரு கதை வடிவமைப்பதற்கு சிறந்த பாடமாக இருப்பதாக ஒரு கருத்து நிலவுகிறது. படத்தில் வரும் காட்சிகள் யதார்த்தத்தை எடுத்தியம்புவதாக கூறப்படுகிறது. ஜெண்டில் மேன் படமும் இதற்கு இணையாக புகழப்படுவது உண்டு. 


இந்தியன் படத்தின் இரண்டாம் பாகம் தற்போது உருவாகி வருகிறது. கிட்டத்தட்ட 25 அண்டுகளுக்கு பிறகு அதே கமல்-அதே ஷங்கரின் கூட்டணியில் உருவாகிவரும் இந்த படத்தை பார்க்க ரசிகர்கள் அனைவரும் ஆர்வமுடன் காத்துக்கொண்டுள்ளனர். 


கண்டிப்பாக பார்க்க வேண்டிய ஷங்கரின் படங்கள்..


ஷங்கர் இயக்கிய படங்கள் ரசிகர்களை ஈர்க்க தவறியதே இல்லை. அதிலும் குறிப்பாக அந்நியன் மற்றும் ஐ போன்ற படங்கள் இவரது தனித்துவத்தை எடுத்துக்காட்டின. நீங்கள் இவரது இயக்க திறமைக்கு ரசிகராக இருந்தால் நீங்கள் கண்டிப்பாக பின்வரும் படங்களை பார்க்க வேண்டும். 


முதல்வன்:


ஒரு பத்திரிகையாளன் ஒரு நாள் முதல்வனாகி மக்களின் நிரந்தர தலைவனாக மாறும் கதைதான், ‘முதல்வன்’. அர்ஜுனுடன் ஜெண்டில் மேன் படத்திற்கு பிறகு ஷங்கர் இணைந்த கதை இது. இந்த படம் பல பத்திரிக்கையாளர்களை அந்த துறையை தேர்வு செய்ய தூண்டியதாக கூறப்படுகிறது. 


பாய்ஸ்:


ஒரு படத்தில் சமூக கருத்துகளை கூறினால் அடுத்த படத்தில் ஜாலியான காதல் கதை எடுப்பது ஷங்கரின் வழக்கம். அப்படி அவர் எடுத்த படம்தான், பாய்ஸ். சித்தார்த், ஜெனிலியா உள்ளிட்ட பலர் இதில் நடித்திருப்பர். இந்த படம் இளம் வயதினரிடையே எழும் மனப்போராட்டங்கள் உள்ளிட்ட பல பிரச்சனைகளை இந்த படத்தில் அலசியிருப்பர். 


சிவாஜி:


‘பாஸ் மொட்ட பாஸ்..’ என மொட்டைத்தலையுடன் வரும் ரஜினிக்கு யாரும் அந்த அளவிற்கு மாஸான பஞ்சை எழுதவில்லை. இந்தியன் படத்தை போலவே இதிலும் கருப்பு பணம் குறித்து பேசியிருப்பார் ஷங்கர். 


நண்பன்:


விஜய்யை வைத்து முதன்முதலாக ஷங்கர் இயக்கிய படம் இது. பாலிவுட் படமான ‘3 இடியட்ஸ்’ படத்தை தழுவி தமிழில் எடுக்கப்பட்ட படம் இது. இன்றளவும் நல்ல ஃபீல்குட் படங்களின் பட்டியலில் ரசிகர்களின் ஃபேவரட்டாக இந்த படம் இடம்பெற்றுள்ளது. 


மேலும் படிக்க | DD Returns: மூன்றே நாட்களில் இத்தனை கோடி வசூலா..? ‘டிடி ரிட்டர்ன்ஸ்’ வசூல் விவரம்..!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ