Mysskin: மிஷ்கினிற்கு இவ்வளவு பெரிய மகளா? ஆச்சரியத்தில் நெட்டிசன்கள்!
Mysskin Daughter: தமிழ் திரையுலகின் பிரபல இயக்குநர்களுள் ஒருவராக இருப்பவர், மிஷ்கின். இவர், பொங்கல் பண்டிகையை ஒட்டி, தனது மகளுடன் எடுத்த புகைப்படம் வெளியாகியிருந்தது.
தமிழ் திரையுலகில், பன்முக திறமை கொண்ட கலைஞர்களுள் ஒருவராக இருப்பவர், மிஷ்கின். இயக்குநராக கலக்கிய இவர், தனது படங்களின் மூலமாகவே நடிகராக மாறினார். திரைக்கதை எழுதுவது, பாடல்கள் பாடுவது, பட தயாரிப்பு, இசையமைப்பு என பலதரப்பட்ட திறமைகளை இவர் வெளிப்படுத்தி வருகிறார்.
மிஷ்கின்:
‘யூத்’ படத்தில் துணை நடிகராக வந்து, திரையுலகிற்குள் நுழைந்தவர் மிஷ்கின். பின்னர் காதல் வைரஸ், ஜித்தன் உள்ளிட்ட படங்களில் துணை நடிகராக நடித்தார். பின்னர், 2006ஆம் ஆண்டு வெளியான‘சித்திரம் பேசுதடி’ படம் மூலம் இயக்குநராகவும் திரைக்கதை ஆசிரியராகவும் உருவெடுத்தார். தொடர்ந்து அஞ்சாதே, நந்தலாலா, யுத்தம் செய், முகமூடி, ஒநாயும் ஆடுக்குட்டியும் உள்ளிட்ட பல படங்களை இயக்கி நல்ல இயக்குநராக ரசிகர்கள் மத்தியில் பெயரெடுத்தார். இவர் இயக்கிய பிசாசு மற்றும் சைக்கோ படம் சரியான ரசிகர்களை போய் சேரவில்லை என்றாலும் நல்ல விமர்சனங்களை பெற்றன.
மேலும் படிக்க | ஒன்றாக வியட்நாம் விடுமுறைக்கு சென்ற ராஷ்மிகா-விஜய் தேவரகொண்டா?
மனைவியை பிரிந்து வாழும் மிஷ்கின்..!
மிஷ்கின், பெரிதாக தனது தனிப்பட்ட வாழ்க்கை குறித்து எங்கும் பேசியதில்லை. இதனால், இவருக்கு ஏற்கனவே திருமணம் ஆனதா இல்லையா? அப்படி திருமணம் ஆகியிருந்தால் குழந்தைகள் இருக்கிறார்களா இல்லையா? என்று ரசிகர்களின் மனங்களில் ஒரு ஓரத்தில் சந்தேகம் இருந்து கொண்டே இருந்தது. இதையடுத்து, இவர் கடந்த ஆண்டு ஜூன் மாதத்தில், ஒரு நேர்காணலில் பேசியிருந்தார். அப்போது, தானும் தனது மனைவியும் கடந்த 14 வருடங்களாக பிரிந்து வாழ்வதாக தெரிவித்திருந்தார். அப்போது, தனது மகள் மூலமாக மனைவியிடம் பேசிக்கொண்டிருப்பதாகவும் போனில் ஒரு வார்த்தை பேசினாலும் இரண்டு ஆண்டுகளுக்கு தனக்கு மகிழ்ச்சியாக இருக்கும் என்றும் கூறியிருக்கிறார். மேலும், கணவனும் மனைவியும் பிரிவதற்கு பல காரணங்கள் இருக்கலாம் என்றும், குழந்தை பிறந்த பிறகு இப்படி பிரிவதற்கு பெரிய காரணம் இருக்கும் என்றும் அவர் கூறினார்.
மகளுடன் போட்டோ பதிவு..
பொங்கல் பண்டிகையை திரை நட்சத்திரங்கள் அனைவரும் சிறப்பாக கொண்டாடினர். நடிகர் மிஷ்கினும் தனது மகளுடன் பொங்கல் பண்டிகையை கொண்டாடியுள்ளார். இவர், புடவை கட்டிய ஒரு பெண்ணுடன் இருக்கும் புகைப்படம் இணையத்தில் வைரலானது. இதை பார்த்த ரசிகர்கள், “இந்த பெண் யார்” என்று தெரியாமல் குழம்பினர்.
அதன் பிறகுதான், இவர் மிஷ்கினின் மகள் என்பது தெரிய வந்திருக்கிறது. மிஷ்கினிற்கு இவ்வளவு பெரிய மகள் இருப்பது பலருக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
மேலும் படிக்க | கங்குவா படத்துடன் மோதும் விஜய்யின் GOAT! ரிலீஸ் எப்போது தெரியுமா?
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ