விக்னேஷ் சிவன் இயக்கத்தில் விஜய் சேதுபதி, நயன்தாரா மற்றும் சமந்தா நடித்திருக்கும் படம் 'காத்து வாக்குல ரெண்டு காதல்' .  'நானும் ரௌடிதான்' படத்தின் வெற்றியை தொடர்ந்து இரண்டாவது முறையாக  விக்னேஷ் சிவன், விஜய் சேதுபதி மற்றும் நயன்தாரா (Nayanthara) கூட்டணி இப்படத்தின் மூலம் இணைந்துள்ளது.  இப்படத்தில் பிரபு, கலா ​​மாஸ்டர், ரெடின் கிங்ஸ்லி, லொள்ளு சபா மாறன், பார்கவ் மற்றும் எஸ். ஸ்ரீசாந்த் ஆகியோர் நடித்துள்ளனர்.  இப்படத்தை விக்னேஷ் சிவன் மற்றும் நயன்தாராவின் ரவுடி பிக்ச்சர்ஸ் நிறுவனம் தயாரித்து உள்ளது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING


காதல் மற்றும் நகைச்சுவை கலந்து உருவாகியிருக்கும் இந்த படம் ரசிகர்கள் மத்தியில் அதிகம் எதிர்பார்க்கப்படுகிறது.  அனிருத் இசையமைப்பில் கடந்த ஆண்டு இப்படத்திலிருந்து வெளியான 'ரெண்டு காதல்' மற்றும் 'டூ டூ டூ' பாடல் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.  இதனை தொடர்ந்து இந்த ஆண்டு ஜனவரி-3ம் தேதி 'நான் பிழை' என்னும் மூன்றாவது பாடல் வெளியானது.  


 



'நான் பிழை' என்று தொடங்கும் இந்த மெலோடியான பாடலை அனிருத் இசையில் ரவி, ஷாஷா திரிபாதி ஆகியோர் பாடியுள்ளனர்.  இந்த பாடலின் வரிகளை விக்னேஷ் சிவன் எழுதியிருக்கிறார்.  இப்பாடல் வெளியான சில நிமிடங்களிலேயே பல ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தது.  இந்த பாடலில் இரண்டு குழந்தைகளுடன் நயன்தாரா வசித்து வருவது போன்றும், விஜய்சேதுபதி டாக்ஸி ட்ரைவர் போன்றும் காட்சிகள் இடம்பெற்று இருந்தது.  இந்த பாடல் தற்போது பலரது மொபைல் ரிங்க்டோன்களாகவும், வாட்ஸ் அப் ஸ்டேட்டஸ்களாகவும் மாறியுள்ளது.  பலரது கவனத்தை ஈர்த்த இந்த பாடல் தற்போது  யூடியூபில் 7 மில்லியன் பார்வைகளை  தாண்டி சாதனை படைத்து ட்ரெண்டிங்கில் இருந்து வருகிறது.


ALSO READ | மணிரத்னம் இயக்கத்தில் ஹீரோவாக களமிறங்கும் சித் ஸ்ரீராம்?


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR