மணிரத்னம் இயக்கத்தில் ஹீரோவாக களமிறங்கும் சித் ஸ்ரீராம்?

மணிரத்னம் இயக்கும் புதிய படமொன்றில் பின்னணி பாடகர் சித் ஸ்ரீராம் கதாநாயகனாக அறிமுகமாகப்போவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.  

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Jan 9, 2022, 01:57 PM IST
  • சிறந்த பின்னணிப் பாடகருக்கான பிலிம்பேர் விருதினை பெற்றுள்ளார் சித் ஸ்ரீராம்
  • தற்போது பிரபல இயக்குனர் மணிரத்னம் படத்தில் கதாநாயகராகவும் நடிக்க போவதாக தகவல்கள் வெளியாகியாகி இருக்கிறது.
மணிரத்னம் இயக்கத்தில் ஹீரோவாக களமிறங்கும் சித் ஸ்ரீராம்? title=

தனது காந்த குரலால் பல ரசிகர்களை ஈர்த்து கொண்டிருப்பவர் பிரபல பின்னணி பாடகர் சித் ஸ்ரீராம்.  இந்த கால இளைஞர்களின் காதுகளில் இவரது பாடல்கள் அதிகளவில் ஒலித்துக்கொண்டு இருக்கின்றன.  சிறந்த பின்னணிப் பாடகருக்கான பிலிம்பேர் விருதினையும் இவர் பெற்றுள்ளார்.  பின்னணி பாடகராக பட்டையை கிளப்பி பிரபலமான இவர் தற்போது பிரபல இயக்குனர் மணிரத்னம் படத்தில் கதாநாயகராகவும் நடிக்க போவதாக தகவல்கள் வெளியாகியாகி இருக்கிறது.

ALSO READ | நடிகர் சிம்பு - நிதி அகர்வால் விரைவில் திருமணம்?

தனக்கே உரித்தான தனி பாணியில் அசத்தலான படங்களை திரையுலகிற்கு கொடுப்பவர் இயக்குனர் மணிரத்னம்.  இவரின் படங்களுக்கென்றே தனி ரசிகர் பட்டாளம் உள்ளது.  2013ம் ஆண்டு மணிரத்னம் இயக்கத்தில் கவுதம் கார்த்திக் நடிப்பில் வெளியான படம் 'கடல்'.  ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்த இந்த படத்தில் பின்னணி பாடகர் சித் ஸ்ரீராம் 'அடியே' எனும் பாடலை பாடி திரையுலகிற்கு அறிமுகமானார்.  இந்த படத்தில் மணிரத்னம் கொடுத்த வாய்ப்பின் மூலம் சித் ஸ்ரீராம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானதுடன், ஒரே பாடலில் புகழின் உச்சத்திற்கு சென்றார்.

sidsriram
 
தற்போது இயக்குனர் மணிரத்னம் பிரம்மாண்ட பொருட்செலவில் பொன்னியின் செல்வன்-1 படத்தை இயக்கி வருகிறார்.  இப்படத்தில் விக்ரம், ஐஸ்வர்யா ராய் பச்சன், கார்த்தி, ஜெயம் ரவி, திரிஷா, ஜெயராம், ஐஸ்வர்யா லட்சுமி, விக்ரம் பிரபு, ஆர் சரத்குமார், ஆர் பார்த்திபன், பிரபு மற்றும் பிரகாஷ் ராஜ் போன்ற பல நட்சத்திர பட்டாளங்கள் இணைந்து நடித்துள்ளனர்.  இப்படத்தின் முதல் பாகத்தை முடித்த பின்னர், படத்தின்  இரண்டாம் பாகத்தினை மணிரத்னம் இயக்கப்போவதாக கூறப்பட்டு வந்த நிலையில், அதற்கு முன்னர் வேறு கதைக்களத்தில் ஒரு படத்தை இயக்க போவதாக கூறப்படுகிறது.  

maniratnam

மேலும் இந்த புதிய படத்தில் அவர் பின்னணி பாடகர் சித் ஸ்ரீராமை கதாநாயகனாக வைத்து இயக்க போவதாக தகவல் வெளியாகியுள்ளது.  இந்த படத்திற்கு திரைக்கதையை ஜெயமோகன் எழுதி வருவதாகவும் கூறப்படுகிறது.  விரைவில் இப்படம் குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.  மணிரத்னம் தயாரித்த 'வானம் கொட்டட்டும்' என்ற படத்தில் சித் ஸ்ரீராம் இசையமைப்பாளராக பணியாற்றினார் என்பது குறிப்பிடத்தக்கது.

ALSO READ | டிசம்பர்-31 அன்று வெளியாகும் 14 படங்கள்!

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News