ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களுக்கு ரசிகர்கள் மத்தியில் எப்போதும் நல்ல வரவேற்பு உண்டு. தொலைக்காட்சி சேனலும் தொடர்ந்து புதுப்புது சீரியல்களை களமிறக்கி மக்களை கவர்ந்து வருகிறது. அந்த வகையில் அக்டோபர் 9ஆம் தேதி முதல் ‘நளதமயந்தி’ என்ற பெயரில் புதிய சீரியல் ஒளிபரப்பாகி வருகிறது. நளதமயந்தி சீரியல் திங்கள் முதல் சனி வரை தினமும் மாலை 6.30 மணிக்கு ஒளிபரப்பாகிறது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

நளதமயந்தி இன்றைய எபிசோட் அப்டேட்:
ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் சனி வரை தினமும் மாலை 6.30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் நளதமயந்தி. இந்த சீரியலின் நேற்றைய எபிசோடில் நளன் தமயந்தியை பார்க்கவும் இவள் அவனை பார்க்கவும் சென்றிருந்த நிலையில் இன்று நடக்க போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க. 


மேலும் படிக்க | Bigg Boss Season 7: வைல்டு கார்டு என்ட்ரியில் இந்த விஜய் டிவி பிரபலம்? வெளியான வீடியோ!


அதாவது, தமயந்தி வீட்டில் அவளது தாத்தா அவள் மீது கோபமாக இருப்பது ஏன் என்பது குறித்த விஷயங்கள் தெரிய வருகிறது. அதுமட்டுமில்லாமல் அன்னலட்சுமி மெஸ்க்கு கடன் கொடுத்தவர் 30 வருஷமாக கடனை திருப்பி தரல, ஆகையால் இந்த ஹோட்டலை இடித்து தர்மட்டமாக்கிடுவேன் என மிரட்ட தமயந்தி செய்வதறியாது தவிக்கிறாள். 



இங்கே நளனுக்கு பெண் பார்க்க அவனது குடும்பத்தார் முடிவு செய்ய அவனது அப்பா நானும் வருகிறேன் என்று சொல்லி கிளம்ப நளன் நீங்க வரக்கூடாது என்று சொல்ல அவர் சட்டையை பிடித்து நான் ஏண்டா வர கூடாது என்று கேள்வி கேட்க நலன் கோபத்தில் பின்பக்கத்தில் இருக்கும் போட்டோவில் வேகமாக குத்த அந்த போட்டோ கண்ணாடி சுக்குநூறாக உடைகிறது. 



அப்பாவுக்கும் நளனுக்கும் என்ன பிரச்சனை, தமயந்தி இந்த பிரச்சனையில் இருந்து எப்படி மீண்டு வர போகிறாள் என்பதை அறிய நளதமயந்தி சீரியலை உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காண தவறாதீர்கள்.


 


மேலும் படிக்க | விஜய்யா? ரஜினியா? தென்னிந்திய திரையுலகில் அதிகம் சம்பளம் வாங்கும் நடிகர் யார்?


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ