Bigg Boss Season 7: வைல்டு கார்டு என்ட்ரியில் இந்த விஜய் டிவி பிரபலம்? வெளியான வீடியோ!

Bigg Boss Season 7: பிக்பாஸ் சீசன் 7 நிகழ்ச்சி இந்த ஆண்டு தொடங்கி நடைபெற்று வருகிறது.  பல புதிய விதிமுறைகளுடன் போட்டி ஆரம்பமாகி உள்ளது.

 

1 /6

கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் பிக் பாஸ் தமிழ் 7 நிகழ்ச்சி கடந்த ஞாயிற்றுக்கிழமை தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.    

2 /6

முதல் வார எவிக்சனில் அனன்யா வெளியேற்றப்பட்டுள்ளார். மேலும் எழுத்தாளர் பாவா செல்லதுரை மன அழுத்தம் காரணமாக போட்டியில் இருந்து வெளியேறி உள்ளார்.   

3 /6

இந்நிலையில், பிரபல விஜய் டிவி புகழ் நாஞ்சில் விஜயன், பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து அவருக்கு அனுப்பப்பட்ட பரிசு பெட்டியை வீடியோ மூலம் பகிர்ந்துள்ளார்.   

4 /6

அந்த பெட்டிக்குள் என்ன இருக்கிறது என்பதை அவர் காட்டவில்லை, இதனால் அடுத்து பிக்பாஸ் போட்டியாளராக உள்ளே செல்ல போகிறாரோ என்று ரசிகர்கள் எதிர்பார்த்து உள்ளனர்.   

5 /6

பொதுவாக 50 நாட்களுக்கு மேல் தான் வைல்டு கார்ட் என்ட்ரீயில் போட்டியாளர்கள் வருவார்கள்.  ஆனால் இந்த முறை பாவா செல்லத்துரை தாமாக வெளியே சென்றதால் விரைவில் புதிய ஒருவர் வருவார் என்று எதிர்பாக்கப்படுகிறது.    

6 /6

ஆனாலும், நாஞ்சில் விஜயன் கையில் இருக்கும் பெட்டி புரமோஷனுக்காக பிக்பாஸில் இருந்து பிரபலங்களுக்கு அனுப்பும் கிப்ட் என்பதால், அவர் பிக்பாஸ் வீட்டிற்குள் செல்வது உறுதி ஆகவில்லை.