பரணி போட்ட கண்டிஷன் - அண்ணா சீரியல் இன்றைய எபிசோட் அப்டேட்!

Anna TV Serial Online: ஷண்முகம் பரணி சாப்பிடுவதை பார்த்து நீ சாப்பிட்டா போதும் என சாதாரணமாக எடுத்து கொள்கிறான். இதனுடன் இன்றைய எபிசோடு பரபரப்பாக செல்கிறது.  

Written by - RK Spark | Last Updated : Oct 9, 2023, 12:48 PM IST
  • கோர்த்து விட்ட முத்துப்பாண்டி.
  • பரணி போட்ட கண்டிஷன்.
  • அண்ணா சீரியல் இன்றைய எபிசோட் அப்டேட்.
பரணி போட்ட கண்டிஷன் - அண்ணா சீரியல் இன்றைய எபிசோட் அப்டேட்! title=

Anna TV Serial Online: ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் சனி வரை தினமும் இரவு 8.30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் அண்ணா. இந்த சீரியலின் நேற்றைய எபிசோடில் பரணி விருந்து சாப்பிடாமல் முத்துபாண்டியை பிரியாணி வாங்கிட்டு வர சொல்லி சாப்பிட்ட நிலையில் இன்று நடக்க போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க.  அதாவது ஷண்முகம் பரணி சாப்பிடுவதை பார்த்து நீ சாப்பிட்டா போதும் என சாதாரணமாக எடுத்து கொள்கிறான், அடுத்து முத்துப்பாண்டி வீட்டிற்கு வெளியே பாக்கியம் மற்றும் சிவபாலன் செப்பல் இருப்பதை பார்த்து விடுகிறான். 

மேலும் படிக்க | கோடி கோடியாய் சம்பளம் வாங்கும் தென்னிந்திய நடிகைகள்..லிஸ்டில் யார் டாப் தெரியுமா?

இதனைத்தொடர்ந்து வீட்டிற்கு வந்த அவன் சௌந்தரபாண்டியிடம் விஷயத்தை சொல்லி அம்மாவை இந்த முறை கண்டிக்காக விட்டால் அடுத்து விருந்து இந்த வீட்டில் இருக்கும் என சொல்கிறான். பிறகு பாக்கியமும் சிவபாலனும் வீட்டிற்கு வர சௌந்தரபாண்டி பாக்கியத்தை அடிக்க பாய குறுக்கே புகும் சிவபாலன் அப்பாவின்கையை பிடிக்க அவன் கையில் இருக்கும் மையை பார்த்து அதிர்ச்சி அடைகிறார். 

anna

அந்த கள்ள ஒட்டு போட்டது நீ தானா உன்னை கொல்லாமல் விட மாட்டேன் என அரிவாளுடன் துரத்த அங்கிருந்து பயந்து ஓடுகிறான், இங்கே தங்கைகள் எல்லாரும் பரணியை ரூமுக்குள் படுத்து கொள்ள சொல்ல அவள் நான் படுத்துகிறேன், ஆனால் உன் அண்ணன் உள்ள வர கூடாது என கண்டிஷன் போடுகிறாள். இரவு ஆனதும் சிவபாலன் பயந்து பயந்து வீட்டிற்கு வந்து பாக்கியத்திடம் பேசி கொண்டிருக்கும் போது சௌந்தரபாண்டி அவனை பார்த்து அவன் விரலை வெட்டாமல் விட மாட்டேன் என ஆவேசப்படுகிறார். 

இதனால் பாக்கியம் சௌந்தரபாண்டி காலில் விழுந்து கெஞ்ச நீ அந்த இசக்கியை கல்யாணம் கட்டிக்கலாம்னு கனவு கண்டுட்டு இருக்கல, அது இந்த ஜென்மத்துல நடக்காது.. அது தான் உனக்கு கொடுக்கிற தண்டனை என அதிர்ச்சி கொடுக்கிறார் சௌந்தரபாண்டி. இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய அண்ணா சீரியலை உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காண தவறாதீர்கள்.

மேலும் படிக்க | மல்டிபிளக்ஸில் லியோ படம் வெளியாகாதா? வெளியான அதிர்ச்சி தகவல்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News