நானியின் டக் ஜெகதீஸ் ரிலீஸ் தேதி அறிவிப்பு!
நானி, ரீத்து வர்மா, ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்துள்ள டக் ஜெகதீஷ் திரைப்படம் வரும் செப்டம்பர் மாதம் 10ஆம் தேதி அமேசன் பிரைம்மில் வெளியாகும் என்று படக்குழு அறிவித்துள்ளது.
நானி, ரீத்து வர்மா மற்றும் ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பில் உருவாகியுள்ள டக் ஜெகதீஷ் திரைப்படம் ஏப்ரல் 23 ஆம் தேதி ரிலீஸாக இருந்தது. நின்னுகோரி மற்றும் மஜிலி ஆகிய இரண்டு வெற்றிப் படங்களுக்குப் பிறகு நானி – இயக்குனர் சிவா நிர்வானா கூட்டணியில் இந்த படம் உருவாகியுள்ளதால் மிகப்பெரிய எதிர்பார்ப்பு இருந்தது.
டக் ஜெகதீஷ் திரைப்படம் ஓடிடியில் வெளியாக உள்ளதாக செய்திகள் வெளிவந்ததிலிருந்து ஆந்திர திரையுலகில் கடும் எதிர்ப்பு கிளம்பியது. இதற்கு பதிலளிக்கும் விதமாக டக் ஜெகதீஷ் படத்தின் தயாரிப்பாளர் மற்றும் நானி தனித்தனியாக அறிக்கையை வெளியிட்டனர். இரண்டு வருடங்களுக்கு மேலாக டக் ஜெகதீஷ் படத்தினை பத்திரமாக பாதுகாத்து வந்துள்ளோம். தொழில்நுட்ப வளர்ச்சி காலத்தில் நீண்ட நாட்கள் படத்தினை கையில் வைத்திருக்க முடியாது. வேறுவழியின்றி ஓடிடி செல்கிறோம் என்றும் திரைப்படங்களை திரையரங்கில் பார்ப்பதே எங்களது விருப்பம். தற்போது உள்ள அசாதாரணமான சூழ்நிலை காரணமாக வேறு வழியின்றி ஓடிடி செல்கிறோம் என்று கூறியிருந்தனர்.
ALSO READ வேறுவழியின்றி ஓடிடி செல்கிறோம்: டக் ஜெகதீஷ் தயாரிப்பாளர் உருக்கம்
இந்நிலையில் இன்று டக் ஜெகதீஷ் திரைப்படம் செப்டம்பர் 10-ஆம் தேதி அமேசன் பிரைம்மில் வெளியாகும் என்று படக்குழு அறிவித்துள்ளது. அதே தேதியில் ஆந்திர திரையரங்கில் நாகசைதன்யா, சாய்பல்லவி நடித்த லவ் ஸ்டோரி திரைப்படம் வெளியாக உள்ளது. இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ள ஐஸ்வர்யா ராஜேஷ்க்கு தொடர்ந்து படங்கள் வெளியாகி வருகிறது. சிறிது தினங்களுக்கு முன் பிளான் பி மற்றும் பூமிகா என இரண்டு படங்கள் வெளியானது. நேற்று ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்கும் ரிபப்ளிக் படத்தின் போஸ்டர் வெளியானது. இன்று அவர் நடித்துள்ள டக் ஜகதீஷ் படத்தின் ரிலீஸ் தேதி வெளியாகியுள்ளது.
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.
Android Link: https://bit.ly/3hDyh4G
Apple Link: https://apple.co/3loQYe