சென்னை: லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாராவின் அனைத்து படங்களுக்கும் அவருடைய ரசிகர்களிடையே அதிக எதிர்பார்ப்பு இருப்பது இயல்பான விஷயம். அதிலும், நெற்றிக்கண் திரைப்படம் சமீப காலங்களில் அதிக எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியுள்ள படமாகும். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இந்த படம் OTT-யில் வெளியிடப்படும் என கூறப்படுகின்றது. மிலிந்த் ராவ் இயக்கியுள்ள நெற்றிக்கண் படம், 2011 ஆண்டு வெளிவந்த கொரிய மொழி படமான ப்ளைண்ட் படத்தின் அதிகாரப்பூர்வ ரீமேக் ஆகும். கண் பார்வை இல்லாத ஒரு பெண், தன்னுடைய மற்ற திறன்களைப் பயன்படுத்தி ஒரு சீரியல் கொலையாளியைக் கண்டுபிடிப்பதுதான் இப்படத்தின் கதைக்களம். 


இப்படத்தில் அஜ்மல் அமீர், சரண், இந்துஜா மற்றும் மணிகண்டன் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். விக்னேஷ் சிவனின் ரவுடி பிக்சர்ஸ் மற்றும் கிராஸ் பிக்சர்ஸ் இப்படத்தை இணைந்து தயாரிக்கின்றன. 'அவள்' புகழ் கிரிஷ் கோபாலகிருஷ்ணன் இப்படத்திற்கு இசை அமைத்துள்ளார். இப்படத்தின் ஒளிப்பதிவை ஆர்.டி.ராஜசேகர் கையாள்கிறார். படத்தின் டீஸர் கடந்த நவம்பரில் வெளியானது. இது ரசிகர்களின் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. 


தற்போது விக்னேஷ் சிவன் (Vignesh Shivan) நெற்றிக்கண் படத்தைப் பற்றிய ஒரு சமீபத்திய அப்டேட்டை அளித்துள்ளார். 



ALSO READ: பிறந்தநாளில் நெற்றிக்கண்ணை திறந்தார் லேடி சூப்பர் ஸ்டார்: Teaser release!!


நெற்றிக்கண்ணைத் (Netrikann) தவிர நயன்தாராவின் அண்ணாத்த மற்றும் காத்து வாக்குல ரெண்டு காதல் ஆகிய இரண்டு படங்களும் வெளியாகவுள்ளன. சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் படமான அண்ணாத்த படத்தில் நயன்தாராவுடன் கீர்த்தி சுரேஷ் மற்றும் பல முன்னணி நடிகர்கள் நடிக்கிறார்கள். இப்படத்தை சிவா இயக்கியுள்ளார்.


காத்து வாக்குல ரெண்டு காதல் படத்தை விக்னேஷ் சிவன் எழுதி இயக்கி உள்ளார். இதில் நயன்தாராவுடன் (Nayanthara) விஜய் சேதுபதி மற்றும் சமந்தா அக்கினேனி ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கிறார்கள்.


ALSO READ: நெற்றிக்கண் : அதிரடி ஆக்‌ஷன் காட்சிகளில் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR