பிறந்தநாளில் நெற்றிக்கண்ணை திறந்தார் லேடி சூப்பர் ஸ்டார்: Teaser release!!

‘நெற்றிக்கண்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் ஏற்கனவே ரசிகர்களின் மனதில் அதிக அளவிலான எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியுள்ளது.

Written by - ZEE Bureau | Last Updated : Nov 18, 2020, 09:22 AM IST
  • நயன்தாராவின் நெற்றிக்கண் படத்தின் டீசர் ரிலீஸ் ஆனது.
  • அவரது பிறந்த நாளான இன்று படக்குழு டீசரை ரிலீஸ் செய்தது.
  • சமீப காலங்களின் அதிக எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியுள்ள படங்களில் இதுவும் ஒன்று என்பது குறிப்பிடத்தக்கது.
பிறந்தநாளில் நெற்றிக்கண்ணை திறந்தார் லேடி சூப்பர் ஸ்டார்: Teaser release!!

நயன்தாரா ரசிகர்களுக்கு குட் நியூஸ்!! நயன்தாரா ரசிகர்களால் ஆவலுடன் எதிர்பார்க்கப்படும் படமான நெற்றிக்கண் படத்தின் டீசர் ரிலீஸ் ஆனது.

நயன்தாராவின் பிறந்தநாளான இன்று படத்தின் டீசரை வெளியிட்டது படக்குழு. சமீப காலங்களின் அதிக எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியுள்ள படங்களில் இதுவும் ஒன்று என்பது குறிப்பிடத்தக்கது.  

‘நெற்றிக்கண்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் ஏற்கனவே ரசிகர்களின் மனதில் அதிக அளவிலான எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியுள்ளது. வழக்கமான நயன்தாரா படங்களைப் போலவே இதுவும் ஒரு வித்தியாசமான கதைக்களமாக இருக்கும் என்றே தோன்றுகிறது. படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கில் நயன்தாரா கண்பார்வையற்றவராக நடித்திருக்கலாம் என்பதை ஊகிக்க முடிகிறது.

மிலிந்த் ராவ் இயக்கியுள்ள நெற்றிக்கண் படத்தை விக்னேஷ் சிவனின் ஹோம் பேனர் ரவுடி பிக்சர்ஸ் தயாரிக்கிறது.

ஹீரோவுக்காக படம் எடுக்கப்படும் காலம் போய் ஹீரோயினுக்காக படம் எடுக்க வைத்த சில நடிகைகளில் நயன்தாராவும் (Nayanthara) ஒருவர். ‘அறம்’, ‘டோரா’. ‘ராஜா ராணி’ என பல படங்களில் நடிப்பின் மிகச்சிறந்த பரிமாணங்களைக் காட்டியுள்ள நயன்தாரா, ‘லேடி சூப்பர் ஸ்டார்’ என அழைக்கப்படுவதில் ஆச்சரியம் ஏதுமில்லை.

ALSO READ: வைரல் ஆகும் நயன்தாராவின் அசத்தும் photos: விக்னேஷுக்கு நன்றி கூறும் ரசிகர்கள்

More Stories

Trending News