நெற்றிக்கண் : அதிரடி ஆக்‌ஷன் காட்சிகளில் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா

மிலிந்த் ராவ் இயக்கத்தில் உருவாகும் நெற்றிக்கண் படத்தில் இடம்பெறும் அதிரடி ஆக்‌ஷன் காட்சிகளில் நடிகை நயன்தாரா நடித்துள்ளாராம்.

Last Updated : May 24, 2020, 04:37 PM IST
நெற்றிக்கண் : அதிரடி ஆக்‌ஷன் காட்சிகளில் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா

இயக்குநர் மிலிந்த் ராவ் அடுத்ததாக நயன்தாராவை வைத்து ’நெற்றிக்கண்’ என்கிற திரில்லர் படத்தை இயக்கி வருகிறார்.  இப்படத்தை ரவுடி பிக்சர்ஸ் சார்பில் விக்னேஷ் சிவன் தயாரிக்கிறார். கார்த்திக் கணேஷ் ஒளிப்பதிவு செய்யும் இப்படத்திற்கு கிரிஷ் கோபாலகிருஷ்ணன் இசையமைக்க உள்ளார். இப்படத்தில் நயன்தாரா கண் பார்வையற்ற பெண்ணாக நடிக்கிறார். மேலும் இப்படம் கடந்த 2011-ம் ஆண்டு வெளியான ’பிளைண்டு’ என்ற கொரியன் படத்தின் ரீமேக்காகும்.

இப்படத்தின் படப்பிடிப்பு இறுதிகட்டத்தை எட்டியுள்ளது. ஊரடங்கு காரணமாக எஞ்சியுள்ள படப்பிடிப்புகளை நடத்த உள்ளனர்.

இந்நிலையில், இப்படத்தில் இந்நிலையில், சண்டை காட்சிகளில் நயன்தாரா டூப் போடாமல் நடித்துள்ளார். இந்த படத்தில் வித்தியாசமான நயன்தாராவை ரசிகர்கள் பார்ப்பார்கள் என்று எடிட்டர் லாரன்ஸ் கிஷோர் சமீபத்திய நேர்காணலில் கூறினார். 

More Stories

Trending News