நயன்தாரா திருமணம்... தல, தளபதிக்கு அழைப்பு
நடிகை நயன்தாரா திருமணத்துக்கு அஜித்துக்கும் விஜய்க்கும் அழைப்பு சென்றிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
வாழ்க்கையில் பல வலிகளை பார்த்தவர் நயன்தாரா. அவரது தனிப்பட்ட வாழ்க்கையை வைத்து பலரால் விமர்சிக்கப்பட்டவரும்கூட. இருப்பினும் தன்னம்பிக்கையையும், உழைப்பையும் கைவிடாத அவர் தற்போது கோலிவுட் நாயகிகளில் நம்பர் 1.
கதைக்கு முக்கியத்துவம் கொடுத்து நடித்துவரும் அவர் நடிகைகளிலேயே அதிகம் சம்பளம் வாங்கும் நடிகையாக இருக்கிறார். ரசிகர்களால் லேடி சூப்பர் ஸ்டார் என்றும் அழைக்கப்படுகிறார்.
அவர் நானும் ரெளடிதான் படத்தில் நடித்தபோது அப்படத்தின் இயக்குநர் விக்னேஷ் சிவனை காதலித்தார். பல வருடங்களாக காதலித்துவரும் இருவரும் ஒரே வீட்டில் இருந்துவருகின்றனர். அதுமட்டுமின்றி ரௌடி பிக்சர்ஸ் என்ற தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கி படங்களை தயாரித்தும், வெளியிட்டும்வருகின்றனர். இந்தச் சூழலில் நயன் - விக்னேஷ் சிவன் திருமணம் எப்போது என்ற கேள்வி எழுந்தது.
இந்நிலையில் ஜூன் 9ஆம் தேதி நயன்தாராவுக்கும் - விக்னேஷ் சிவனுக்கும் மகாபலிபுரத்தில் திருமணம் நடைபெற்றது. திருமணத்திற்கு விஜய் சேதுபதி, சமந்தா, நெல்சன் திலீப்குமார் உள்ளிட்டோருக்கு மட்டுமே அழைப்பு செல்லவிருப்பதாகவும், வரவேற்பு நிகழ்ச்சியில் திரையுலக பிரபலங்கள் கலந்துகொள்வார்கள் என்றும் பேசப்பட்டது.
அதேசமயம், விஜய், அஜித் ஆகியோருடன் நிறைய படங்களில் பணியாற்றியிருக்கும் நயன் எப்படி தனது திருமணத்துக்கு அவர்களை அழைக்காமல் இருப்பார் என்ற கேள்வியையும் ரசிகர்கள் எழுப்பினர்.
இந்நிலையில் நயன்தாரா - விக்னேஷ் சிவன் திருமணத்திற்கு நடிகர்கள் அஜித், விஜய் ஆகியோருக்கு அழைப்பு சென்றிருப்பதாகவும் இருவரும் திருமணத்தில் கலந்துகொள்ள வாய்ப்புகள் அதிகம் எனவும் கூறப்படுகிறது. குறிப்பாக அஜித்தின் அடுத்தப் படத்தை விக்னேஷ் சிவன் இயக்கவிருப்பதால் அஜித் நிச்சயம் கலந்துகொள்வார் என அவரது ரசிகர்கள் எதிர்பார்த்திருக்கின்றனர்.
மேலும் படிக்க | விக்ரம் - முதல் ஷோ பார்க்க ஆசைப்படும் எதிர்க்கட்சி தலைவர்
முன்னதாக, இருவருக்கும் ஜூன் முதல் வாரத்தில் திருப்பதியில் திருமணம் நடக்குமென கூறப்பட்டது. அதற்கான ஏற்பாடுகளில் இருவரும் மும்முரமாக இருக்கின்றனர்.
ஆனால், திருப்பதியில் 150 பேர்வரை கலந்துகொள்ள கோயில் நிர்வாகம் அனுமதியளிக்காததால் அவர்களது திருமணம் மகாபலிபுரத்தில் நடக்கவிருக்கிறது.
மேலும் படிக்க | சூர்யாவின் ’அருவா’ படத்தின் அப்டேட் - ஹரியின் சூடான பதில்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR