விக்ரம் - முதல் ஷோ பார்க்க ஆசைப்படும் எதிர்க்கட்சி தலைவர்

கமல் நடித்திருக்கும் விக்ரம் படத்தின் முதல் காட்சியை பார்க்க எதிர்க்கட்சி தலைவர் விருப்பம் தெரிவித்துள்ளார்.

Written by - க. விக்ரம் | Last Updated : May 31, 2022, 02:40 PM IST
  • விக்ரம் படத்தை பார்க்க ஆசைப்படும் எதிர்க்கட்சித் தலைவர்
  • மலேசியா சென்ற கமல் ஹாசன்
  • ஜூன் 3ஆம் தேதி விக்ரம் படம் வெளியாகிறது.
 விக்ரம் - முதல் ஷோ பார்க்க ஆசைப்படும் எதிர்க்கட்சி தலைவர் title=

மாநகரம், கைதி, மாஸ்டர் ஆகிய படங்கள் மூலம் கவனம் ஈர்த்தவர் இயக்குநர் லோகேஷ் கனகராஜ். கமல் ஹாசனின் தீவிர ரசிகரான இவர் கமலை வைத்து விக்ரம் படத்தை இயக்கியுள்ளார். அனிருத் இசையமைத்திருக்கும் இப்படத்தில் அமர் என்ற கதாபாத்திரத்தில் ஃபஹத் பாசில், சந்தானம் என்ற கதாபாத்திரத்தில் விஜய் சேதுபதி நடித்திருக்கின்றனர்.

படத்தின் ட்ரெய்லரும், பாடல்களும் சமீபத்தில் வெளியாகி பலத்த வரவேற்பைப் பெற்றுள்ளன. அதுமட்டுமின்றி லோகேஷ் கனகராஜ் கமலின் ரசிகர் என்பதால் ப்ரோமோஷன் பணிகளில் க்ரியேட்டிவாக யோசிக்கிறார்.

மேலும் படிக்க | சூப்பர் சிங்கரில் வாத்தியாராக மாறிய ’விக்ரம்’ கமல்

அந்தவகையில் பஞ்ச தந்திரம் படத்தில் கமல் நண்பர்களாக நடித்தவர்களை வைத்து விக்ரம் பட ப்ரோமோவை வெளியிட்டிருந்தார்.

Kamal

கமல் ஹாசனும் ப்ரோமோஷனுக்காக ரஜினிகாந்த் உள்ளிட்டோரை சந்தித்தார். மேலும் கேரளா, மலேசியா ஆகிய பகுதிகளில் நடந்த ப்ரோமோஷன் நிகழ்ச்சியிலும் கலந்துகொண்டார். அப்படி மலேசியா சென்றபோது அந்நாட்டின் எதிர்க்கட்சித் தலைவர் அன்வர் இப்ராஹிம்மை கமல் நேரில் சந்தித்து பேசினார்.

 

இந்தச் சந்திப்பு குறித்து அன்வர் இப்ராஹிம் தனது ட்விட்டர் பக்கத்தில், “சூப்பர் ஸ்டார் கமல்ஹாசனை நான் சந்தித்தேன். எங்கள் இருவருக்குள்ளும் இந்திய வரலாறு மற்றும் நல்லாட்சி குறித்து நீளமான விவாதம் நடந்தது.

 

மலேசியா தலைநகரில் ஜூன் 3-ஆம் தேதி வெளியாகும் ‘விக்ரம்’ படத்தின் முதல் காட்சியில் நான் கலந்து கொள்வேன்” என குறிப்பிட்டுள்ளார்.

மேலும் படிக்க | ரஜினி மற்றும் தோனியை ரொம்ப பிடிக்கும்! ஊர்வசி ரவுடேலா!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

 

Trending News