தமிழின் முன்னணி நட்சத்திர நடிகை நயன்தாரா ரசிகர்களுடன் தொடர்ந்து இணைப்பில் இருக்கும் விதமாக, பிரபல சமூக வலைதளமான இன்ஸ்டாகிராமில்  இணைந்திருக்கிறார். நயன்தாரா  இன்ஸ்டாகிராம் பக்கம் தொடங்கிய நொடியில் இருந்து ரசிகர்கள் அவரை பின் தொடர்ந்து வருகின்றனர்.  


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

நயன்தாரா:


சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த்  உடன் நடித்த “சந்திரமுகி”  படத்தின் பிரமாண்ட வெற்றிக்குப் பிறகு,  அவர் தொடந்து நடித்த அனைத்துப் படங்களும் ப்ளாக்பஸ்டர் படங்களாக அமைந்தன.  ரஜினிகாந்த், விஜய், அஜித், தெலுங்கில் சிரஞ்சீவி, பவன் கல்யாண் என சூப்பர்ஸ்டார்  நடிகர்களின் முதல் சாய்ஸாக மாறினார் நயன்தாரா. முன்னணி டாப் நடிகர்கள் அனைவருடனுடன்  இணைந்து ப்ளாக்பஸ்டர் படம்  தந்த பெருமை கொண்ட நயன்தாரா, தென்னிந்திய சினிமாவிமன் நம்பர் 1 நடிகையாக புகழப்படுகிறார். 


நாயகர்களுக்கு சமமாக  பெண் கதாப்பாத்திரங்களை  மையமாக கொண்ட கதைகளிலும் நயன்தாரா நடித்து வருகிறார். அவர் நடித்த, மாயா, அறம், கோலமாவு கோகிலா படங்கள்  ப்ளாக்பஸ்டர்  படங்களாக வெற்றி பெற்றன. தற்போது நயன்தாராவின் மார்கெட் ஏறுமுகத்தில் உள்ளது. இவர், 20 வருடங்களுக்கு மேலாக தென்னிந்திய  திரையுலகின் முன்னணி நடிகையாக விளங்கி வருகிறார். 


மேலும் படிக்க | இணையத்தில் கசிந்த ஜெயிலர் படம்-அதிர்ச்சியில் ரசிகர்கள்!


இன்ஸ்டா பக்கத்தில் நயன்தாரா..


தமிழ் திரையுலகை சேர்ந்த பெரும்பாலான பிரபலங்கள் சமூக வலைதளங்களில் ஆக்டிவாக உள்ளனர். வெகு சிலர் மட்டுமே எந்த சமூக வலைதள பக்கங்களிலும் தலை வைத்து படுக்காமல் இருந்தனர். அதில் ஒருவராக இருந்தவர் நயன்தாரா. இவர் குறித்த பதிவுகளை, இவரது கணவர் விக்னேஷ் சிவன் மட்டுமே பகிர்ந்து வந்தார். இதையடுத்து, தானும் ஒரு இன்ஸ்டா பக்கத்தை நயன்தாரா தொடங்கியுள்ளார். இதில், முதன் முதலாக தன் குழந்தைகளுடன் இருக்கும் வீடியோவையும் ரீல்ஸாக பதிவிட்டுள்ளார். 


“நான் வந்துட்டேன்னு சொல்லு..”


நயன்தாரா, தன் குழந்தைகளுடன் கூலிங் கிளாஸ் போட்டுக்கொண்டு, ரஜினியின் ஜெயிலர் படத்தில் இடம் பெற்றிருந்த “ஹுக்கும்” பாடலின் பின்னணி இசையை தன் வீடியோவில் இணைத்துள்ளார். 



இந்த ரீல்ஸ் வீடியோவிற்கு ரசிகர்கள் லைக்ஸ்களை குவித்து வருகின்றனர். தன் இரட்டை குழந்தைகளான உயிர் மற்றும் உலக் ஆகியோருடன் நயன் இணைந்து வெளியிட்டிற்கும் முதல் வீடியோ பதிவு, இதுவாகும். இதில், “நான் வந்துட்டேன்னு சொல்லு..” என்ற கேப்ஷனையும் நயன் இணைத்துள்ளார். 


ஜவான் படத்தில் நயன்..


பாலிவுட் பாட்ஷா என்ரு புகழப்படும் ஷாருக்கான், ஜவான் படத்தில் கதாநாயகனாக நடித்துள்ளார். இவருக்கு ஜோடியாக, நயன்தாரா அப்படத்தில் நடித்து பாலிவுட்டில் கால் பதித்துள்ளார். அட்லி இயக்கத்தில் பிரமாண்ட பான் இந்திய திரைப்படமாக உருவாகியுள்ள ஜவான் வரும் செப்டம்பர் 7 ஆம் தேதி உலகமெங்கும் வெளியாகவுள்ளது. தற்போது தன் ரசிகர்களை மகிழ்விக்கும் விதமாக அவர்களுடன் தொடர்ந்து உரையாடும் நோக்கில் இன்ஸ்டாகிராமில் இணைந்துள்ளார். உலகம் முழுக்கவுள்ள ரசிகர்கள் நயன்தாராவிற்கு வாழ்த்து தெரிவித்து அவரது சமூக வலைத்தள பக்கத்தை ஃபாலோ செய்து வருகின்றனர். 


திரைப்பட விழாவில் பங்கேற்கவில்லை..


நடிகை நயன்தாரா தன் தயாரிப்பு அல்லது நடிக்கும் பிற படங்களின் பட விழாக்களில் கலந்து கொள்வதை கடந்த சில வருடங்களாக தவிர்த்து வருகிறார். இதற்கு சரியான காரணமும் தெரிவிக்கப்படுவதில்லை. ஊடகங்களுக்கு பேட்டி கொடுப்பதையும் நிறுத்தி இருந்த இவர், திருமணத்திற்கு பிறகு பத்திரிக்கையாளர்களை சந்தித்தார். குழந்தைகள் பிறந்த பிறகு டிடி தொகுப்பாளனியாக இருந்த ஒரு நேர்காணலில் கலந்து கொண்டார். இந்த நிலையில், நேற்று ஜவான் பட விழா தாம்பரத்தில் உள்ள சாய் ராம் இன்ஜினியரிங் கல்லூரியில் நடைப்பெற்றது. இதில் கலந்து கொள்ள ஷாருக்கான் மும்பையில் இருந்து வந்திருந்தார். அனிருத், விஜய் சேதுபதி, அட்லி என படக்குழுவினர் அனைவரும் அதில் கலந்து கொண்டனர். நயன்தாரா இதில் கலந்து கொள்வார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அவர் அவ்விழாவில் கலந்து கொள்ளவில்லை. இந்த நிலையில், அவர் இன்ஸ்டாவில் இணைந்து இவ்வாறு வீடியோ வெளியிட்டிருப்பதை பலர் ட்ரோல் செய்து வருகின்றனர். 


மேலும் படிக்க | Jawan: அனிருத்துடன் குத்தாட்டம் போட்ட ஷாருக்கான்! வைரலாகும் வீடியோ!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ