விக்னேஷ் சிவன் - நயன்தாரா திருமணம் தான் தற்போது கோலிவுட்டின் ஹாட் டாக்காக உள்ளது. இந்த நட்சத்திர ஜோடியின் 6 வருட காதல் கதை குறித்த சுவாரஸ்யமான விஷயங்களை தெரிந்து கொள்ளலாம்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

நானும் ரவுடி தான் படத்தின் கதையை எழுதிய பின் எப்படியாவது அந்த படத்தில் நயன்தாராவை நடிக்க வைக்க வேண்டும் என்று தீவிரம் காட்டியுள்ளார் விக்னேஷ் சிவன். நயன்தாரா ரசிகரான இவர், பலகட்ட முயற்சிக்குப் பிறகு அவரிடம் கதை சொல்லும் வாய்ப்பு கிடைத்துள்ளது. முதல்முறையாக அவரை நேரில் பார்த்த போது சற்று பயமாக இருந்ததாக பல பேட்டிகளில் கூறியுள்ளார் விக்னேஷ் சிவன்.



கதை கேட்டதும் உடனே ஓகே சொல்லிவிட்டாராம் நயன். பட ஷீட்டிங்கில் நயன்தாராவை மிகவும் அக்கறையுடன் கவனித்து வந்த விக்னேஷ், ஒருகட்டத்தில் அவரை காதலிக்கத் தொடங்கியுள்ளார். படம் வெளியாகி சூப்பர் ஹிட் அடித்தது. அதன்பிறகு அடிக்கடி நயன்தாரா - விக்னேஷ் இருவரும் ஒன்றாக வெளியே சுற்றி மீடியாக்களில் செய்தியானார்கள். 



பிறகு இவர்கள் காதலிப்பதாக கூறப்பட்டது. ஆனால் இருவரும் அமைதி காத்து வந்த நிலையில், விக்னேஷ் சிவன் தனது சமூக வலைதள பக்கங்களில் நயன்தாராவுடன் இருக்கும் புகைப்படங்களை வெளியிட்டு காதலை உறுதி செய்தார். ஆரம்பத்தில் இந்த ஜோடியை ஹேட்டர்கள் கலாய்த்தனர். ஆனால் யாருடைய பேச்சும் தனது வாழ்க்கையை தீர்மானிக்காது என்பதில் தெளிவாக இருந்தது இந்த ஜோடி.


மேலும் படிக்க | ‘விக்ரம்’ல ஹிட் அடிச்ச ‘சக்கு சக்கு’ ஹாரிஸ் ஜெயராஜ் பாட்டா?!


அதன்பிறகு பல சினிமா நிகழ்ச்சிகளில் ஒன்றாக பங்கேற்றனர். அப்போது இவர்கள் காதல் குறித்த கேள்விகளுக்கு நயன்தாரா வெட்கப்பட்டு சிரிப்பார். அனைத்து மேடைகளிலும் நயன்தாராவை பாராட்டாமல் விடமாட்டார் விக்கி. அதுமட்டுமல்ல நயன்தாரா படங்களை தேர்வு செய்வதில் இருந்து, அவரது சினிமா கேரியர் உயர்வது வரை தேவையான அனைத்தையும் கவனித்து செய்து வருகிறார் விக்கி. அதே போல படங்களுக்கு பாட்டு எழுதுவது, படத்தை இயக்குவது, தயாரிப்பது என தனது வேலைகளையும் விட்டுவிடவில்லை . 



ஒன்றாக லிவ்விங் டூகெதரில் இருக்கும் இந்த ஜோடி எப்போது திருமணம் செய்து கொள்ளப்போகிறார்கள் என ஒட்டுமொத்த திரையுலகமும் எதிர்பார்த்து காத்திருந்தது. அடிக்கடி இவர்களுக்குள் சண்டை என்றும், பிரேக் அப் செய்து விட்டார்கள் என்றும் கிசுகிசுக்கள் எழும். ஆனால் அதற்கெல்லாம் ஒன்றாக இருக்கும் புகைப்படங்களை வெளியிட்டு பதிலடி கொடுத்துவிட்டு சைலண்ட்டாக தங்கள் வாழ்க்கையை பார்த்து வந்தார்கள். அடிக்கடி வெளிநாடுகளுக்கு ஜாலி ட்ரிப் சென்று பலரையும் கடுப்பேற்றி வந்தார்கள் என்பதெல்லாம் வேறு கதை.


மேலும் படிக்க | எந்த முறைப்படி நயன்தாராவுடன் திருமணம்?- விக்னேஷ் சிவன் பதில்!


இவர்கள் காதல் வளர வளர நயன்தாராவின் மார்க்கெட்டும் வளர்ந்தது. கடந்த 6 ஆண்டுகளாக நயன்தாரா தென்னிந்திய அளவில் முக்கிய நடிகையாக இருந்து தற்போது பாலிவுட் பக்கமும் சென்றுள்ளார். அட்லீ இயக்கும் தவான் படத்தில் ஷாருக்கானுக்கு ஜோடியாக இவர் நடித்து வருவதாக கூறப்படுகின்றது. அதேபோல விக்னேஷ் சிவனும் நடிகர் அஜித்குமாரை வைத்து படம் இயக்குகிறார். காதல் என்ன செய்யும் என்பதற்கு இந்த ஜோடி சிறந்த எடுத்துக்காட்டாக உள்ளனர். கோலிவுட்டில் அஜித் - ஷாலின், சூர்யா - ஜோதிகா ஜோடி போல தற்போது விக்னேஷ் சிவன் - நயன்தாரா ஜோடியும் ரசிகர்களுக்கு மிகவும் பிடித்த ஜோடியாக உள்ளது. 



நயன் தனது பெயருக்கு ஏற்ப தனது திருமணத்தையும் 9th ஜூன் தான் செய்துகொள்கிறார். மகாபலிபுரத்தில் இவர்கள் திருமணம் ஜூன் 9-ம் தேதி நடைபெறுகிறது. இதே காதலுடன் அவர்கள் வாழ்க்கை முழுவதும் மகிழ்ச்சியாக இருக்க ஜீ தமிழ் நியூஸ் சார்பாக வாழ்த்துக்கள். 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR