நடிகை நயன்தாரா - இயக்குநர் விக்னேஷ் சிவன் திருமணம் கடந்த மாதம் 9-ம் தேதி மிக பிரம்மாண்டமாக நடைபெற்றது. இசிஆரில் உள்ள ரிசார்ட்டில் நடைபெற்ற இந்த திருமணத்தில் பாலிவுட் நடிகர்கள் சிலர் கலந்து கொண்டனர். அதோடு ரஜினிகாந்த், விஜய் சேதுபதி. சூர்யா - ஜோதிகா, அட்லீ, அனிரூத் என கோலிவுட் பிரபலங்கள் பலர் கலந்து கொண்டனர். திருமணத்துக்காக பிரம்மாண்ட செட் அமைக்கப்பட்டது. விருந்தினர்களை ஆச்சர்யப்படுத்தும் வகையில் அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டன. கோலிவுட்டில் இவ்வளவு பிரம்மாண்ட நட்சத்திர ஜோடி திருமணம் இதுதான் என்ற அளவுக்கு சிறப்பாக திருமணம் நடந்து முடிந்தது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மேலும் படிக்க | முடிவுக்கு வந்த நயன் - விக்கி ஹனிமூன்! - பின்னணியில் யார் தெரியுமா?


கோடிக்கணக்கில் செலவு செய்து நடைபெற்ற இந்த திருமண ஒளிபரப்பை நெட்பிளிக்ஸ் நிறுவனம் பல கோடிகள் கொடுத்து வாங்கியதாக கூறப்படுகிறது. அதோடு திருமணத்துக்கான செலவையும் நெட்பிளிக்ஸ் ஏற்றதாக பேசப்படுகின்றது. பாலிவுட், ஹாலிவுட் பிரபலங்களின் திருமண ஒளிபரப்பு இதுபோல ஓடிடி தளத்தில் வெளியாவது வழக்கமான ஒன்று. சமீபத்தில் கூட கேத்ரினா கைப் திருமணம் இப்படி தான் நடைபெற்றது. இந்நிலையில், தற்போது நெட்பிளிக்ஸ்-இல் நயன்தாரா திருமணம் ஒளிபரப்பு செய்யப்படுவதில் சிக்கல் எழுந்துள்ளதாக கூறப்படுகின்றது. 


நெட்பிளிக்ஸ் உடனான ஒப்பந்தப்படி, நயன்தாரா - விக்னேஷ் சிவன் திருமண கோலத்தில் இருக்கும் ஒரு சில புகைப்படங்களை மட்டுமே சமூக வலைதளங்களில் வெளியிட வேண்டும். அதேபோல திருமணம் முடிந்த கையோடு விக்கி ஒரு சில புகைப்படங்களை வெளியிட்டிருந்தார். இந்நிலையில், தற்போது திருமணம் முடிந்து ஒரு மாதம் ஆன நிலையில், சூர்யா, விஜய் சேதுபதி, ரஜினிகாந்த் திருமணத்தின் போது வந்த புகைப்படங்களை விக்கி வெளியிட்டிருந்தார். 


இதனால் ஒப்பந்தத்தை அவர் மீறியதாக நெட்பிளிக்ஸ் நிறுவனம் கடுப்பில் உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதனால் திட்டமிட்டபடி நெட்பிளிக்ஸ் நயன்தாரா - விக்னேஷ் சிவன் திருமணத்தை ஒளிபரப்புமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது. அதேபோல விக்கி - நயன் ஜோடியும் நெட்பிளிக்ஸ் மீது அதிருப்தியில் உள்ளதாக கூறப்படுகின்றது. 


மேலும் படிக்க | ’மெஹந்தியில் கூட காதல்’ விக்னேஷ் சிவனுக்கு நயன்தாரா கொடுத்த சர்பிரைஸ்


திருமணம் முடிந்து ஒரு மாதம் கடந்த நிலையில், திருமண வீடியோவில் டீசரை கூட வெளியிடாமல் நெட்பிளிக்ஸ் காலம் தாழ்த்துவதால், உறவினர்களும், நண்பர்களும் திருமண வீடியோ மற்றும் புகைப்படங்களை கேட்பதாகவும், இதனால் புதுமண ஜோடி கடும் அப்செட்டில் உள்ளதாகவும் சொல்லப்படுகின்றது. இப்படி பல சிக்கல்கள் இருக்கும் நிலையில், திருமண வீடியோ எப்போது வெளியாகும் என ரசிகர்கள் ட்விட்டரில் தொடர்ந்து நெட்பிளிக்ஸ் நிறுவனம் மற்றும் விக்னேஷ் சிவனிடம் கேட்டு வருகின்றனர்.


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ