விக்னேஷ் சிவன் தயாரிப்பில் நயன்தாரா நடித்துள்ள 'நெற்றிக்கண்' படம் தற்போது வெளியாகியுள்ளது.  


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

விக்னேஷ் சிவன் தயாரிப்பில் நயன்தாரா (Nayanthara) நடித்துள்ள 'நெற்றிக்கண்' திரைப்படம் டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் நேரடியாக வெளியாகிறது. 'அவள்' படத்தை இயக்கிய மிலிந்த் ராவ் இந்த படத்தையும் இயக்கியுள்ளார். 


நெற்றிக்கண் (Netrikann) படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளில் வெளியாகிறது.  இந்தப் படத்துக்கு ஆர்.டி.ராஜசேகர் ஒளிப்பதிவு செய்ய, கிரிஷ் கோபாலகிருஷ்ணன் இசையமைத்துள்ளார். 


இந்தப் படத்தின் முன்னோட்டம் ஏற்கனவே வெளியாகி படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்தது.  தற்போது  பிற்பகல் 12.15 மணிக்கு நெற்றிக்கண் ரிலீசானது.   இந்த படத்தில் நயன்தாரா கண் பார்வை தெரியாத மாற்றுத்திறனாளியாக நடித்திருப்பார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்த படத்தில் அஜ்மல் வில்லனாக நடித்துள்ளார். 


ALSO READ: Netrikann Trailer: நயன்தாராவின் நெற்றிக்கண் படத்தின் ட்ரைலர் வெளியானது


பொதுவாக தான் நடிக்கும் படங்களின் பிரமோஷன்களில் கலந்து கொள்ளாத நயன்தாரா தற்போது அவரது காதலன் விக்னேஷ் சிவன் தயாரித்துள்ள நெற்றிக்கண் படத்திற்காக பல ஆண்டுகளுக்குப் பிறகு பிரமோஷனில் இறங்கியுள்ளார்.  சமீபத்தில் ஒரு தனியார் தொலைக்காட்சியில் நெற்றிக்கண் படத்தைப் பற்றிய ஒரு நேர்காணலில் கலந்து கொண்டார்.  இந்த நேர்காணலில் தனக்கும் விக்னேஷ் சிவனுக்கும் (Vignesh Sivan)  நிச்சயதார்த்தம் முடிந்துவிட்டதாகவும் தெரிவித்து அனைவரையும் ஆச்சரியப்படுத்தினார் நயன்தாரா.


ஆர். ஜே. பாலாஜி இயக்கத்தில் கடைசியாக நயன்தாரா நடித்த மூக்குத்தி அம்மன் திரைப்படமும் இதே ஓடிடி தளத்தில் வெளியானது.  


இன்று டிஸ்னி பிளஸ் ஹாட் ஸ்டார் ஓடிடியில் நயன்தாராவின் நெற்றிக்கண்ணை தொடர்ந்து அஜய் தேவ்கன் நடிக்கும் புஜ் திரைப்படமும் வெளியாகியுள்ளது.


ALSO READ: நெற்றிக்கண் : அதிரடி ஆக்‌ஷன் காட்சிகளில் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR