கோலமாவு கோகிலா, டாக்டர் படங்கள் மூலம் கவனம் ஈர்த்த இயக்குநர் நெல்சன் திலீப்குமார் பீஸ்ட் படத்தை இயக்கினார். விஜய்யுடன் நெல்சன் இணைந்ததால் இப்படத்தின் மீது பலமடங்கு எதிர்பார்ப்பு நிலவியது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ஆனால் படம் எதிர்பார்த்த அளவு வெற்றியை பெறவில்லை. முக்கியமாக நெல்சனை நெட்டிசன்கள் வறுத்தெடுத்தனர். 


மேலும், விஜய்யை வைத்து சொதப்பியதுபோல் ரஜினியை வைத்தும் சொதப்பிவிடுவாரோ என்ற பேச்சு எழுந்த சமயத்தில் ரஜினி படத்தை நெல்சன் இயக்கவில்லை என்ற தகவலும் வெளியானது. இருப்பினும் அந்தத் தகவல் வெறும் வதந்தி என உறுதியாகியுள்ளது. எனவே ரஜினியின் அடுத்த படத்தை நெல்சனே இயக்கவிருக்கிறார்.



பீஸ்ட்டில் சம்பாதித்த அவப்பெயரை ரஜினியை வைத்து இயக்கும் படத்தில் போக்கிக்கொள்ள வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறார் நெல்சன். இதற்காக ரஜினி படத்தின் கதையை அங்குலம் அங்குலமாக செதுக்க முடிவு செய்திருப்பதாக கூறப்படுகிறது. ரஜினியுடனான படத்தில் ஐஸ்வர்யா ராய், ரம்யா கிருஷ்ணன், ப்ரியங்கா மோகன் உள்ளிட்டோர் நடிக்கவிருப்பதாக கூறப்படுகிறது.


மேலும்  படிக்க | முழு வேகத்தில் விடுதலை ஷூட்டிங் - உறுதி செய்த விஜய் சேதுபதி


இந்நிலையில் நெல்சன் திலீப்குமார் தனது ஆஸ்தான கேங்குடன் துபாய் சென்றிருக்கிறார். அவருடன் அவரது மனைவி மோனிஷா, ரெடின் கிங்ஸ் லீ உள்ளிட்டோரும் சென்றிருக்கின்றனர். அதுதொடர்பான புகைப்படத்தை நெல்சனின் மனைவி மோனிஷா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்திருக்கிறார். துபாயில் சிறிய ஓய்வை முடித்துவிட்டு ரஜினி பட வேலைகளில் நெல்சன் இறங்க இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.


மேலும் படிக்க | இன்று ஓடிடியில் வெளியாகியுள்ள படங்கள்!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR