முழு வேகத்தில் விடுதலை ஷூட்டிங் - உறுதி செய்த விஜய் சேதுபதி

விடுதலை படத்தின் ஷூட்டிங் ஸ்பாட் புகைப்படங்களை விஜய் சேதுபதி பகிர்ந்துள்ளார்.

Written by - க. விக்ரம் | Last Updated : May 21, 2022, 07:32 PM IST
  • விறுவிறுப்படைந்திருக்கும் விடுதலை ஷூட்டிங்
  • விஜய் சேதுபதி பகிர்ந்த புகைப்படங்கள் வைரல்
 முழு வேகத்தில் விடுதலை ஷூட்டிங் - உறுதி செய்த விஜய் சேதுபதி title=

இந்திய சினிமாவின் முக்கிய இயக்குநர்களில் ஒருவர் வெற்றிமாறன். இவர் கடைசியாக இயக்கிய வடசென்னை, அசுரன் ஆகிய படங்கள் மிகப்பெரிய வெற்றியை பெற்றன. நாவல்களை அடிப்படையாக கொண்டு திரைப்படங்களை உருவாக்கும் பாணியை வெற்றிமாறன் சமீபகாலமாக அதிகம் செய்துவருகிறார்.

அந்தவகையில் ஜெயமோகன் எழுதிய கதையை அடிப்படையாக வைத்து விடுதலை என்ற படத்தை அவர் இயக்கிவருகிறார். இதில் விஜய்சேதுபதில், சூரி,கௌதம் வாசுதேவ், பிரகாஷ் ராஜ் உள்ளிட்டோர் நடிக்கின்றனர்.

Viduthalai

இப்படத்தின் முக்கிய காட்சிகளுக்கான படப்பிடிப்பு சத்தியமங்கலம் வனப்பகுதியில் நடந்தது. இதற்கிடையே சூர்யாவை வைத்து வாடிவாசல் படத்தை இயக்கவிருக்கும் வெற்றிமாறன் அப்படத்தின் டெஸ்ட் ஷூட்டை சமீபத்தில் நடத்தினார்.

 

இதனால் விடுதலை படத்தின் ஷூட்டிங் தடைபட்டதாக பேச்சு எழுந்தது. அதுமட்டுமின்றி நீண்ட நாள்களாக இந்தப் படத்தின் ஷூட்டிங் நடப்பதால் எப்போது முடியும் என்ற கேள்வியும் ரசிகர்களிடம் எழுந்திருந்தது.

Viduthalai

இந்நிலையில், விடுதலை படத்தின் ஷூட்டிங் மீண்டும் ஆரம்பித்துள்ளது. முழுவீச்சில் நடந்துவரும் ஷூட்டிங் தொடர்பான புகைப்படங்களை நடிகர் விஜய் சேதுபதி தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். இதனை ரசிகர்கள் அதிகம் பகிர்ந்துவருகின்றனர்.

மேலும் படிக்க | தளபதி விஜய் எனக்கு எப்போதும் ஸ்பெஷல் தான் -மனம் திறந்த மாளவிகா மோகனன் !

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News