94-வது ஆஸ்கர் விருது வழங்கும் விழா அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் கடந்த 28-ம் தேதி நடைபெற்றது. இதில், கிங் ரிச்சர்டு படத்தில் நடித்ததற்காக நடிகர் வில் ஸ்மித் தனது முதல் ஆஸ்கர் விருதை வென்றார். இந்த விழாவை தொகுத்து வழங்கிய நடிகர் கிறிஸ் ராக், வில் ஸ்மித்தின் மனைவியான நடிகை ஜடா பிங்கெட்டை  உருவக்கேலி செய்யும் வகையில் பேசினார். அலோபீசியா எனும் நோயால் பாதிக்கப்பட்டுள்ள ஜடா பிங்கெட், நோயின் காரணமாக மொட்டை அடித்துள்ளார். கிறிஸ் ராக்கின் கேலியை பொறுமையாக கேட்டுக்கொண்டிருந்த வில் ஸ்மித் ஒரு கட்டத்தில் பொறுமையை இழந்து மேடை ஏறிச்சென்று அவரை அறைந்தார். தனது செயலுக்காக கிறிஸ் ராக்கிடமும், ஆஸ்கர் குழுவிடமும், வில் ஸ்மித் மன்னிப்புக் கோரினார். இதனைத் தொடர்ந்து , அகாடெமி ஆஃப் மோஷன் பிக்சர் ஆர்ட்ஸ் அண்ட் சயின்ஸ் உறுப்பினர் பதவியிலிருந்து விலகுவதாகவும் வில் ஸ்மித் அறிவித்தார். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மேலும் படிக்க | திடீரென்று தனது பதவியை ராஜினாமா செய்த நடிகர் வில் ஸ்மித்!


ஆனால், ஆஸ்கர் விழாவில் சர்ச்சையை கருத்தில் கொண்டு வில் ஸ்மித்தின் நடிப்பில் வெளியாகவிருந்த படங்கள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. பிரபல ஓடிடி தளமான நெட்ஃபிளிக்ஸ் வில் ஸ்மித் நடிப்பில் வெளியாக இருந்த ஃபாஸ்ட் அண்டு லூஸ் (Fast and Loose) திரைப்படத்தை நிறுத்தி வைத்துள்ளது.  இதனைத் தொடர்ந்து, சோனி நிறுவனம் பேட் பாய்ஸ் 4 (Bad Boys 4) திரைப்படத் தயாரிப்பை நிறுத்தி வைத்துள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. நெட்ஃபிக்ஸ்சில் வெளியாக உள்ள வில் ஸ்மித்தின் 'தி கவுன்சில்' (The Council) மற்றும் 'பிரைட் 2' (Bright 2) ஆகிய படங்களும், சோனி நிறுவனம் தயாரிக்கவிருந்த ஹேன்காக் (Hancock) மற்றும்  கராத்தே கிட்(Karate Kid)  திரைப்படங்களின் 2-ம் பாகத்தின் தயாரிப்பு பணிகளும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. மேலும் வில் ஸ்மித் நடிப்பில் உருவாகியுள்ள எமன்சிபேஷன் திரைப்படத்தின் வெளியீட்டு தேதியும் இன்னும் அறிவிக்கப்படவில்லை. இதனால், நடிகர் வில் ஸ்மித்தின் படங்களுக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது. ஒவ்வொரு நடிகரின் திரைப்பயணத்தின் மணிமகுடமாக விளங்கும் ஆஸ்கர் விருது, நடிகர் வில் ஸ்மித்தை பொறுத்தவரை அவரது திரை வாழ்க்கையில் சரிவை சந்திக்க வைத்துள்ளது.  


மேலும் படிக்க | வில்ஸ் ஸ்மித்தின் மன்னிப்பும், கிறிஸ் ராக்கின் பதிலும்.!


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR