பிக்பாஸ் நாமினேஷனில் ஏற்பட்ட முக்கிய திருப்பம்: புதிய ப்ரோமோ
பிக்பாஸ் நிகழ்ச்சியின் இன்றைய எபிசோடுக்கான புதிய ப்ரோமோ வெளியாகியுள்ளது.
Bigg Boss Tamil Season 5: தனியார் தொலைகாட்சியில் ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சியின் முதல் 4 சீசன்களும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றது. தற்போது பிக் பாஸ் நிகழ்ச்சியின் 5வது சீசன் பிரம்மாண்டமாக தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த நிகழ்ச்சி கடந்த ஒரு வாரமாக கலகலப்பாக சென்றது. இது பார்வையாளர்களுக்கு பெரும் ஆச்சரியத்தை அளித்து உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.
தற்போது விறுவிறுப்பாக பிக் பாஸ் நிகழ்ச்சி (Bigg Boss Tamil) நடைபெற்றுக் கொண்டிருக்கும் நிலையில் நேற்று அனைவரும் எதிர்பார்த்தபடி அபிஷேக் எலிமினேட் செய்யப்பட்டார்.
ALSO READ | பிக்பாஸ் ஐந்தாம் சீசனின் போட்டியாளர்களின் புகைப்படத் தொகுப்பு
இந்நிலையில் பிக்பாஸ் நிகழ்ச்சியில் இன்று நாமினேஷன் படலம் நடைபெற்றது. இதில் ஹவுஸ்மேட்ஸ் அனைவரும் இரண்டு சக போட்டியாளர்களை நாமினேஷன் செய்தார்கள் என்பது குறித்த முதல் ப்ரோமோவில் வெளியானது.
அதன்படி தற்போது வெளியான இரண்டாவது ப்ரோமோவில் நாமினேசன் செய்யப்பட்டவர்கள் விவரத்தை பிக்பாஸ் அறிவித்துள்ளார். அதன்படி இந்த வாரம் பாவனி ரெட்டி, இசைவாணி, அபிநய், இமான் அண்ணாச்சி, வருண் மற்றும் பிரியங்கா நாமினேட் செய்யப்பட்டுள்ளனர்.
இந்த நிலையில் திடீர் திருப்பமாக உங்கள் வசம் உள்ள நாணயத்தின் சலுகையை பயன்படுத்தி உங்களை காப்பாற்றிக் கொள்ள ஒரு நபரை தேர்வு செய்து உங்களுக்கு பதிலாக அவரை நாமினேட் செய்யலாம் என பிக்பாஸ் அறிவிக்கிறார். அதன்படி நாணயத்தை கையில் வைத்திருப்பவர்கள் தங்களை காப்பாற்றிக் கொண்டு, வேறு யாரையாவது நாமினேட் செய்வார்களா என்பதை இன்றைய எபிசோடில் பார்க்கலாம்.
ALSO READ | Biggboss 5: பிக்பாஸ் நிகழ்ச்சியில் திருநங்கை நமீதாவின் கண்ணீரும், கலைஞர் கருணாநிதியும்
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR