உங்க வழிக்கு கொண்டு வருவதெல்லாம் ரொம்ப ஈசி... “நினைத்தேன் வந்தாய்” இன்றைய எபிசோட்
Ninaithen Vandhai Latest Episode: எழில் போட்ட கண்டிஷன்.. பல்பு வாங்கிய மனோகரி - நினைத்தேன் வந்தாய் இன்றைய எபிசோட்டில் என்ன நடக்கும் என்பதைக் குறித்து பார்க்கலாம்.
Ninaithen Vandhai Today Episode: தமிழ் சின்னத்திரையில் திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் இரவு 7:30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் நினைத்தேன் வந்தாய். இந்த சீரியலின் நேற்றைய எபிசோடில் சுடருக்கு எழிலுடன் முதலிரவு ஏற்பாடுகள் நடந்திருந்தது போல கனவு கண்டு அதிர்ச்சியான நிலையில் இன்று நடக்கப் போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க.
அதாவது மனோகரி ஹாஸ்பிடலுக்கு கிளம்ப எழில் நீ ஹாஸ்பிடல் வரவேண்டாம் உனக்கும் எனக்கும் கல்யாணமாக போகுது.. நீ பசங்களோட நல்லா ஜெல்லாகணும்.. அதனால நீ வீட்ல அவங்களோட இரு என்று சொல்லிவிட்டு கிளம்ப மனோகரி கடுப்பாகிறாள்.
அதன் பிறகு செல்வி என்னமா ஹாஸ்பிடலுக்கு போகலையா என்று கேட்க எழில் சொன்ன விஷயத்தை சொல்கிறாள். உடனே செல்வி பசங்கள உங்க வழிக்கு கொண்டு வருவதெல்லாம் ரொம்ப ஈசி.. சுடர் அவங்களுக்கு பிரியாணி எல்லாம் சமைத்து கொடுத்து தான் வளைச்சு போட்டா என்று சொல்ல மனோகரி சூப்பர் ஐடியா அப்போ நானே என்னுடைய கையால பிரியாணி செஞ்சு பசங்களுக்கு பரிமாறுகிறேன் என்று முடிவு எடுக்கிறாள்.
அடுத்ததாக மனோகரி செல்வியின் உதவி கூட இல்லாமல் சிக்கன் பிரியாணி சமைக்க அந்த வழியாக வந்த சுடரை அதை டேஸ்ட் பார்க்க சொல்ல டேஸ்ட் பார்த்த சுடர் கெட்ட நாற்றம் வருவதால் சாப்பிட முடியாமல் தவிக்கிறாள். அதன் பிறகு ராமையா வந்து மாட்ட அவர் சாப்பிட முடியாமல் தெறித்து ஓடுகிறார்.
குழந்தைகளுக்கு பரிமாற அவர்கள் ஏதோ பேட் ஸ்மெல் வருவதாக சொல்லி சாப்பிட மறுக்க எழிலும் அந்த சாப்பாட்டை பார்த்துவிட்டு கெட்ட நாற்றம் வருவதாக சொல்ல மனோகரி பல்பு வாங்குகிறாள்.
அதன் பிறகு நான்கு பேரும் விளையாட்டு பொருள் ஒன்றை வைத்துக்கொண்டு எனக்குத்தான் வேண்டும் என்று அடர் பிடித்துக் கொண்டிருக்க அங்கு வந்த மனோகரியும் அந்த பொருளை பிடித்துக் கொண்டு விடுங்க என்று குழந்தைகளிடம் சத்தம் போட நான்கு பேரும் ஒரே நேரத்தில் விட்டதில் மனோகரி கீழே விழுகிறாள். இதைப் பார்த்து குழந்தைகள் சிரிக்கின்றனர்.
இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய நினைத்தேன் வந்தாய் சீரியலை உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காணத்தவறாதீர்கள்.
மேலும் படிக்க - பெரிய மனுஷனா இருக்க கையை பிடிச்சு இழுக்குற அசிங்கமா இல்ல.. “அண்ணா சீரியல் அப்டேட்”
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ