பெரிய மனுஷனா இருக்க கையை பிடிச்சு இழுக்குற அசிங்கமா இல்ல.. “அண்ணா சீரியல் அப்டேட்”

Anna TV Serial Today Episode: சூடாமணியை அம்மானு சொன்ன இசக்கி.. அசிங்கப்பட்ட சௌந்தரபாண்டி - அண்ணா சீரியல் இன்றைய எபிசோட் அப்டேட் குறித்து தெரிந்துக்கொள்ளுங்கள்.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Jul 18, 2024, 12:15 PM IST
பெரிய மனுஷனா இருக்க கையை பிடிச்சு இழுக்குற அசிங்கமா இல்ல.. “அண்ணா சீரியல் அப்டேட்” title=

Anna TV Serial Latest Eposide: தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் தினமும் இரவு 8:30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் அண்ணா. இந்த சீரியலில் நேற்றைய எபிசோடில் இரண்டு குடும்பமும் கோவிலுக்கு கிளம்பி வந்திருந்த நிலையில், இன்று நடக்க போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம்.

அதாவது, சௌந்தரபாண்டியும் சனியனும் தனியாக கோவிலுக்குள் வர யாரும் அவர்களை கண்டு கொள்ளாமல் இருக்கின்றனர், உள்ளே நிர்வாகிகள் எல்லாரும் வரவேற்க நின்று கொண்டிருக்க சௌந்தரபாண்டி அதை பார்த்து தன்னை வரவேற்க தான் என்று நினைத்து கொள்கிறார்.

இறுதியாக அவர்கள் புதியதாக பொறுப்பேற்றுள்ள பரணியை வரவேற்க சௌந்தரபாண்டி பல்பு வாங்குகிறாள், அதன் பிறகு இசக்கி முத்துபாண்டியை அழைத்து வந்து இவர் இப்போ எல்லாம் முன்ன மாதிரி இல்லை, மாறிட்டாரு என்று ஷண்முகத்திடம் சொல்கிறாள்.

இசக்கி சூடாமணியை பார்த்ததும் அம்மா என்று சொல்ல அனைவரும் ஷாக்காக அம்மாவை தான் அம்மானு கூப்பிட முடியல, அம்மாவோட தோழி உங்களை அம்மானு கூப்பிடலாம் தானே என்று கேட்க சூடாமணி நீ அப்படியே கூப்பிடு என்று சொல்லி சந்தோசப்படுகிறாள்.

மறுபக்கம் சௌந்தரபாண்டி ஒரு பெண்ணை பார்த்து சூடாமணி போலவே இருப்பதாக சொல்லி பின்தொடர்ந்து சென்று அந்த பெண் கையை பிடித்து இழுக்க, அந்த பெண் பெரிய மனுஷனா இருக்க அசிங்கமே இல்லாமல் கையை பிடிச்சு இழுக்குற என்று திட்டுகிறாள்.

அதன் பிறகு இசக்கி விளக்கு போட வேண்டும் என்று சொல்ல சூடாமணி எல்லா ஏற்பாடுகளையும் செய்து தருகிறாள். அடுத்து இசக்கி விளக்கு ஏற்றியதும் அது அணைய போக சூடாமணி ஓடி வந்து விளக்கை அணையாமல் காக்கிறாள்.

அடுத்து இசக்கிக்கு முடி எடுக்கும் நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகள் நடக்கிறது. இப்படியான நிலையில் அடுத்து நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய அண்ணா சீரியலை உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காண தவறாதீர்கள்.

மேலும் படிக்க - “வரலக்ஷ்மியின் முதல் காதல் நான் இல்லை..” தன் மனைவி குறித்து ஓபனாக பேசிய நிக்கோலாய்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News