எத்தனை கோடி கொட்டிக்கொடுத்தாலும் தசாவதாரம் 2 இல்லை - கே.எஸ். ரவிக்குமார்
எத்தனை கோடி ரூபாய் கொட்டிக்கொடுத்தாலும் தசாவதாரம் இரண்டாம் பாகத்தை உருவாக்க முடியாது என இயக்குநர் கே.எஸ். ரவிக்குமார் தெரிவித்துள்ளார்.
கமல் நடிப்பில் கே.எஸ். ரவிக்குமார் இயக்கத்தில் கடந்த ஆம் ஆண்டு வெளியான படம் தசாவதாரம். பத்து வேடங்களில் கமல் நடித்திருந்த இப்படம் பெரும் வெற்றி பெற்றது. இதனையடுத்து தசாவதாரம் படத்தின் இரண்டாம் பாகம் உருவாகுமா என்ற கேள்வி பெரும்பாலான ரசிகர்களிடம் எழுந்தது.
இந்நிலையில், கே.எஸ். ரவிக்குமார் நடித்திருக்கும் ‘கூகுள் குட்டப்பா’படம் மிக விரைவில் ஆஹா ஓடிடி தளத்தில் வெளியாக இருக்கும் நிலையில், கல்லூரி நிர்வாகத்துடன் சேர்ந்து ஆஹா ஓடிடி தளம் நிகழ்ச்சி ஒன்றை ஏற்பாடு செய்திருந்தது.
அப்போது பேசிய ரவிக்குமார், “நடிகர் கமல் ஹாசன் எப்போதும் கடினமான உழைப்பை நம்பக்கூடியவர். வலி இல்லாமல் வெற்றி இல்லை என்பது அவரது பாலிசி. தசாவதாரம் படத்துக்கும் அப்படித்தான் உழைத்தார். சில நாள்களுக்கு முன்பு தசாவதாரம் ரிலீசாகி 14 வருஷம் ஆச்சா? என்று ஆச்சரியத்துடன் 2 மணி நேரம் பேசினார். சில வருடங்களாகவே கமலையும் என்னையும் பார்த்து ‘தசாவதாரம் 2’ எப்போது என்று கேட்கிறார்கள்.
மேலும் படிக்க | உண்மையான குடும்பங்கள் கொண்டாடும் படமாக உருவாகும் 'தளபதி 66'!
ஆனால் எங்கள் இருவருக்கும் எத்தனை கோடிகள் கொட்டிக் கொடுத்தாலும் தசாவதாரம் போன்ற இன்னொரு படத்தை உருவாக்கவே முடியாது. எனவே தசாவதாரம்-2’க்கு வாய்ப்பே இல்லை. ஓடிடி தளங்களால் சினிமாவுக்குப் பாதிப்பா இல்லையா என்பது குறித்தெல்லாம் விவாதிக்க வேண்டியதில்லை.
தொலைக்காட்சி வந்தபோதும் இப்படித்தான் சினிமாவே அழிந்துவிடும் என்று சொல்லிக்கொண்டிருந்தார்கள். சினிமாவை திரையரங்கில் பார்க்கும் அனுபவத்துக்கு எதுவும் ஈடாகாது. அதே சமயம் ஓடிடி என்பது இன்னொரு விஞ்ஞான வளர்ச்சி என்பதை நாம் ஏற்றுக்கொள்ள வேண்டும். அண்மையில் வெளியான எங்கள் ‘கூகுள் குட்டப்பா’வை திரையரங்குகளுக்குச் சென்று பாருங்கள். அப்படிப் பார்க்காதவர்கள் விரைவில் ஆஹா ஓடிடி தளத்தில் விரைவில் பாருங்கள்” என்றார்.
மேலும் படிக்க | பள்ளித் தேர்வில் ‘RRR’ படம் பற்றிக் கேள்வி- வைரலாகும் கொஸ்டின் பேப்பர்!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR