வெளிநாட்டில் `பத்மாவதி`-க்கு தடையில்லை: உச்சநீதிமன்றம்!
மனோகர் லால் சர்மா மனுவை விசாரித்த உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.
பத்மாவதி திரைப்படத்தினை வெளிநாட்டில் வெளியிட தடை விதிக்க வேண்டும் என கோரி, மனோகர் லால் சர்மா தொடுத்த மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்தது!
சித்தூர் ராணி பத்மினியின் கதையினை இந்தியில் "பத்மாவதி" என்ற பெயரில் சினிமாவாக படமாக்கப்பட்டுள்ளது.
இந்த படத்தினை பிரபல பாலிவுட் இயக்குனர் சஞ்சய் லீலா பன்சால் இயக்க, நடிகை தீபிகா படுகோனே ராணி பத்மினியாக நடித்துள்ளார். இப்படத்தில் சித்தூர் ராணி பத்மினியின் வரலாறு தவறாக சித்தரிக்கப்பட்டு உள்ளதாக ராஜஸ்தான், குஜராத் மற்றும் மராட்டிய மாநிலத்தில் வசிக்கும் ராஜ புத்திர வம்சத்தினர் எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதனைதொடர்ந்து இப்படத்திற்கு பிரச்சணைகள் வலுத்த வண்ணம் உள்ளது. இதனால் படத்தின் வெளியீடு தேதியையும் தயாரிப்பு நிறுவனம் ஒத்திவைத்துள்ளது.
இந்நிலையில் வெளிநாடுகளில் பத்மாவதி படத்தை திரையிட தடை விதிக்க வேண்டும் என கோரி மனோகர் லால் சர்மா மனுதாக்கல் செய்தார். இந்த மனுவை விசாரித்த உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.