Controversies Over Oscar Awards: 95ஆவதுஆஸ்கார் விருது விழாவுக்கான நேரம் நெருங்கிவிட்டது. அமெரிக்காவின் நேரப்படி, அந்நாட்டின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரின் டால்பி தியேட்டரில் மார்ச் 12ஆம் தேதி மாலை நடைபெறும் ஆஸ்கார் விருது விழா உலகம் முழுவதும் நேரடி ஒளிபரப்பாக உள்ளது. இந்தியாவில் நாளை (மார்ச் 13) அதிகாலை 5.30 மணிக்கு டிஸ்னி + ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் நேரடியாக ஒளிப்பரப்பாகிறது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இந்தியா சார்பாக, ஆர்ஆர்ஆர் திரைப்படத்தின் நாட்டு நாட்டு பாடல், சிறந்த ஒரிஜினல் பாடலுக்கான பிரிவிலும், தி எலிஃபேன்ட் விஸ்பரர்ஸ் ஆவணப்படம், சிறந்த ஆவணப்பட குறும்படத்திற்கான பிரிவிலும், ஆல் தட் பிரீத்ஸ் என்ற ஆவணப்படம் சிறந்த ஆவணப்படம் பிரிவிலும் இடம்பெற்றுள்ளது. எனவே, வழக்கம்போல் இல்லாமல் இந்த முறை இந்திய திரை ரசிகர்கள் ஆஸ்கார் விருது விழாவை காண பெரும் எதிர்பார்ப்புடன் காத்திருக்கின்றனர்.


அந்த வகையில், ஆஸ்கார் விருது குறித்து சில தகவல்களையும் இங்கு அறிந்துகொள்ளலாம். எந்த அளவிற்கு ஆஸ்கார் விருது பிரபலமானதோ அதே அளவிற்கு அதன் மீதான விமர்சனமும் உள்ளது. விமர்சனங்கள், குற்றச்சாட்டுகள் ஒருபுறமிருக்க, ஆஸ்கார் விருது விழாவை சுற்றி எப்போதும் சர்ச்சைகளும் சுற்றிய வண்ணமே இருக்கும். இந்நிலையில், ஆஸ்கார் விருது விழாவை மிகவும் பரபரப்பாக்கிய சர்ச்சைகள் குறித்து இங்கு காணலாம். 


மேலும் படிக்க | Oscars 2023: ஆஸ்கர் விருது வழங்கும் விழாவை நேரலையில் எங்கு? எப்படி பார்ப்பது?


தொகுப்பாளருக்கு முத்தம் (2003)


2003 ஆம் ஆண்டில், The Pianist என்ற படத்தில் நடித்ததற்காக அட்ரியன் பிராடி சிறந்த நடிகருக்கான விருதை வென்றார், மேலும் அவர் நிகழ்ச்சி தொகுப்பாளர் ஹாலே பெர்ரியை பிடித்து மேடையில் முத்தமிட்டு கொண்டாடினார். இதையடுத்து, தொகுப்பாளர் பெர்ரி அதிர்ச்சியாகவும், சங்கடமாகவும் தோன்றினார். இந்த சம்பவம் சர்ச்சையையும் விமர்சனத்தையும் கிளப்பியது, பலர் பிராடி மீது கடுமையான குற்றச்சாட்டை முன்வைத்தனர்.



தொகுப்பாளரை அறை (2022)


இது அனைவருக்கும் நியாபகம் இருக்கக்கூடிய ஒன்றுதான். கடந்தாண்டு ஆஸ்கார் விழா மேடையில், நடிகர் கிறிஸ் ராக்ஸ் தொகுத்து வழங்கி வந்தார். அப்போது, நடிகர் வில் ஸ்மித்தின் மனைவி ஜடா பின்கட் ஸ்மித் குறித்து கிறிஸ் கேலி செய்தார். அவர் பின்கட் ஸ்மித்தின் குறைவான தலைமுடி குறித்து கேலி செய்தார். பின்கட் அலோபேசியா என்ற குறைப்பாட்டால் தலைமுடியை இழந்திருந்தார். 



முதலில், இந்த ஜோக்குக்கு சிரித்த வில் ஸ்மித், அடுத்து  மனைவியை பார்த்தபோது, அவர் சற்று கண்கலங்கினர். அப்போது, உடனே மேடை ஏறிய வில் ஸ்மித் கிறிஸ் ராக்ஸின் கன்னத்தில் அறைந்தார். இது உலகம் முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இச்சம்பவத்திற்கு பிறகு, வில் ஸ்மித் இரண்டு முறை கிறிஸ் ராக்ஸிடம் பொதுவெளியில் மன்னிப்பு கோரியது நினைவுக்கூரத்தக்கது. 


லா லா லாண்ட் - மூண்லைட் குழப்பம் (2017)


ஆஸ்கார் வரலாற்றில் மறக்கமுடியாத (தவறான காரணங்களுக்காகவும்) தருணங்களில் ஒன்று 89வது அகாடமி விருதுகளில் சிறந்த படத்திற்கான அறிவிப்பு தவறாகக் கையாளப்பட்டதுதான். Faye Dunaway மற்றும் Warren Beatty ஆகியோர் லா லா லேண்டை சிறந்த திரைப்படமாக அறிவித்தனர், ஆனால் சில நிமிடங்களுக்கு பின்னர்தான், மூன்லைட் உண்மையில் வெற்றியாளர் என்பது தெரியவந்தது. தவறான உறை Faye Dunaway மற்றும் Warren Beatty ஒப்படைக்கப்பட்டபோது இந்த பிரச்னை ஏற்பட காரணமாக அமைந்தது. 


விருதை மறுத்த மார்லன் பிராண்டோ (1973)


1973 ஆம் ஆண்டு தி காட்பாதர் படத்தில் நடித்ததற்காக மார்லன் பிராண்டோ சிறந்த நடிகருக்கான விருதை வென்றபோது, அதை நேரில் ஏற்க மறுத்துவிட்டார். மாறாக, பூர்வீக அமெரிக்க ஆர்வலரான சச்சீன் லிட்டில்ஃபீதரை மேடைக்கு அனுப்பி அவர் சார்பாக விருதை நிராகரித்தார். திரைப்படத் துறையில் பூர்வீக அமெரிக்கர்கள் தவறாக நடத்தப்படுவதைப் பற்றி உரை நிகழ்த்தினார்.


மேலும் படிக்க | Oscars 2023: இதுவரை அதிக ஆஸ்கார் வென்ற நடிகை யார் தெரியுமா?


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ