வில் ஸ்மித் சர்ச்சைக்கு விளக்கம் கொடுத்த ஏ.ஆர்.ரகுமான் - மாஸ் பதில்

ஆஸ்கர் சர்ச்சை ஒருபுறமிருக்க, வில் ஸ்மித் பற்றி ஏ.ஆர்.ரகுமான் கூறிய கருத்து வைரலாகியுள்ளது.

Written by - S.Karthikeyan | Last Updated : Apr 26, 2022, 01:43 PM IST
  • வில் ஸ்மித்துக்கு ஆதரவாக ஏ.ஆர் ரகுமான்
  • அவர் ஒரு ஸ்வீட் ஹார்ட் என பதில்
  • Heropanti 2 பட புரோமோஷனில் பேச்சு
வில் ஸ்மித் சர்ச்சைக்கு விளக்கம் கொடுத்த ஏ.ஆர்.ரகுமான் - மாஸ் பதில்  title=

உலகளவில் பிரபலமான ஆஸ்கர் விருது விழா  இந்த ஆண்டு சர்ச்சையுடன் நிறைவடைந்தது. அந்த விழாவில் தொகுப்பாளர் கிறிஸ் ராக் அடித்த காமெடியில் கடுப்பான வில் ஸ்மித், அவரை ஆஸ்கர் மேடையிலேயே அறைந்தார். மனைவி குறித்து கிறிஸ் ராக் கிண்டலடித்தது வில் ஸ்மித்துக்கு பிடிக்கவில்லை. இது மிகப்பெரிய சர்ச்சையாக உருவான நிலையில், ஆஸ்கர் உள்ளிட்ட வேறு எந்த அகாடமி நிகழ்சியிலும் கலந்து கொள்ள ஸ்மித்துக்கு 10 ஆண்டுகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. 

மேலும் படிக்க | பாலிவுட்டில் நடிகையாக களமிறங்கும் சச்சின் மகள் சாரா?

இந்த சர்ச்சை குறித்து உலக பிரபலங்கள் முதல் உள்ளூர் பிரபலங்கள் வரை என கருத்து தெரிவித்துவிட்ட நிலையில், ஆஸ்கர் நாயகன் ஏ.ஆர்.ரகுமான் அமைதி காத்து வந்தார். கபில் சர்மா ஷோவில் கலந்து கொண்ட அவர், இந்த சர்ச்சை குறித்து தன்னுடைய பார்வையை தெரிவித்துள்ளார். வில் ஸ்மித்துடனான புகைப்படத்தை காட்டி கேட்கப்பட்ட கேள்விக்கு பதில் அளித்த ஏ.ஆர்.ரகுமான், வில் ஸ்மித் ஒரு ஸ்வீட் ஹார்ட் எனக் கூறியுள்ளார். 

ஆஸ்கர் நிகழ்வு குறித்து கேட்கப்பட்டபோது, சில நேரங்களில் இதுபோன்ற சம்பவங்கள் நடக்கும் என்றும் அவர் தெரிவித்தார். மேலும், தன்னுடைய இசைப்பயணத்தில் ஊக்குவித்தவர்களையும் ரகுமான் நினைவு கூர்ந்தார். பலர் இருந்தாலும், மதன் மோகன் சாஹாப், எஸ்டி பர்மன் சாஹாப், ஹிருதய்நாத் மங்கேஷ்கர் உள்ளிட்டோர் குறிப்பிட்டு கூறலாம் என ரகுமான் கூறியுள்ளார். தற்போதைய காலத்தில் தமிழ், தெலுங்கு, மலையாளம் என பலர் புதுமையான இசையால் அசத்தி வருவதாகவும் ஏ.ஆர்.ரகுமான் தெரிவித்துள்ளார். Heropanti 2 படத்தின் புரோமோஷன் நிகழ்வுகளில் ரகுமான் பங்கேற்று வருகிறார். இப்படம் ஏப்ரல் 29 ஆம் தேதி ரிலீஸாக உள்ளது.

மேலும் படிக்க | வலிமை வசூலை பாக்ஸ் ஆஃபீஸில் ஓரங்கட்டிய பீஸ்ட்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News