தெலுங்கு மக்களே `பொன்னியின் செல்வன்’ உங்கள் படம் - சுஹாசினி சர்ச்சை பேச்சு
பொன்னியின் செல்வன் தெலுங்கு மக்களின் படம் என சுஹாசினி பேசியிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறது.
தமிழ் நாவல்களில் மணிமகுடம் என போற்றப்படுவது கல்கி எழுதிய பொன்னியின் செல்வன். சோழர்களின் உண்மை வரலாற்றையும், தன் புனைவையும் கலந்து எழுதப்பட்ட பொன்னியின் செல்வன் தமிழர்களின் நெஞ்சில் ஆழமாக பதிந்திருக்கிறது. எனவே இதனை படமாக எடுக்க எம்ஜிஆர், கமல் உள்ளிட்டோர் முயன்றனர். ஆனால் அவர்களால் அது சாத்தியமாக்கப்படவில்லை.
இப்படிப்பட்ட சூழலில் மணிரத்னம் பொன்னியின் செல்வனுக்குட் திரை வடிவம் கொடுத்திருக்கிறார். லைகா தயாரித்திருக்கும் இப்படத்தில் ஆதித்த கரிகாலனாக விக்ரம், அருள்மொழி சோழனாக ஜெயம் ரவி, சுந்தர சோழனாக பிரகாஷ் ராஜ், வந்தியத்தேவனாக கார்த்தி, குந்தவையாக த்ரிஷா, நந்தினியாக ஐஸ்வர்யா ராய், பெரிய பழுவேட்டரையராக சரத்குமார், சின்ன பழுவேட்டரையராக பார்த்திபன், ஆழ்வார்க்கடியான் நம்பியாக ஜெயராம் என பலர் நடித்திருக்கின்றனர்.
படத்தின் ஆடியோவும், ட்ரெய்லரும் சமீபத்தில் வெளியாகி பலத்த வரவேற்பைப் பெற்றுள்ளன. படமானது செப்டம்பர் 30ஆம் தேதி பான் இந்திய படமாக வெளியாகவிருக்கிறது. இதனையொட்டி படக்குழு ப்ரோமோஷன் பணிகளில் தீவிரமாக இருக்கிறது.
அந்தவகையில் ஆந்திராவில் நடந்த ப்ரோமோஷன் நிகழ்ச்சி ஒன்றில் நடிகையும், மணிரத்னத்தின் மனைவியுமான சுஹாசினி கலந்துகொண்டார். அந்நிகழ்ச்சியில் பேசிய அவர், “பொன்னியின் செல்வன் உங்களின் படம். இது தமிழ் படம் என்றாலும் பெரும்பாலான காட்சிகள் ஆந்திரா மற்றும் தெலுங்கானாவில் ஷூட் செய்யப்பட்டது.
தமிழ்நாட்டில் அதிகபட்சமாக 10 நாட்கள் புதுச்சேரி, பொள்ளாச்சியில் ஷூட்டிங் நடந்தது. மீதமுள்ள காட்சிகள் ராஜமுந்திரி மற்றும் ஹைதராபாத்தில் படமாக்கப்பட்டது. எனவே இது உங்களின் படம். நீங்கள் ஆதரிக்க வேண்டும்” என்றார்.
சுஹாசினியின் இந்தப் பேச்சு தற்போது சர்ச்சையாகியுள்ளது. தமிழர்களின் பெருமையை கூறிய நாவலின் திரைவடிவம் எப்படி ஆந்திர மக்களின் படமாக இருக்கும் என கேள்வி எழுப்பும் நெட்டிசன்ஸ்; வியாபாரத்திற்காக நம் பெருமையை விற்பதற்கும், விட்டுக்கொடுப்பதற்கும் சுஹாசினி தயாராகிவிட்டார் எனவும் கடுமையாக விமர்சித்துவருகின்றனர்.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ