தமிழ் சினிமாவின் வளர்ந்து வரும் நடிகர் அசோக் செல்வன் ஹீரோவாக நடித்திருந்த படம் போர் தொழில். இவருடன் சேர்ந்து நடிகர் சரத்குமாரும் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்திருந்தார். ‘போர் தொழில்’ திரைப்படம் ஓடிடியில் வெளியாவது தள்ளிப்போய் காெண்டிருந்த நிலையில், அது எப்போது வெளியாகும் என்பது குறித்த தகவல் கசிந்துள்ளது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

‘போர் தொழில்’ திரைப்படம்..


‘சூது கவ்வும்’ படத்தில் அறிமுகமாகி தற்போது தனக்கென ஒரு ரசிகர் கூட்டத்தை சேர்த்து வைத்திருக்கும் நடிகர், அசோக் செல்வன். இவர் காவல் அதிகாரியாக சமீபத்தில் நடித்திருந்த படம், போர் தொழில். நடிகர் சரத்குமார் இந்த படத்தில் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்திருந்தார். மறைந்த நடிகர் சரத்பாபு நெகடிவ் கதாப்பாத்திரத்தில் நடித்திருக்க, நிகிதா விமல் இதில் நாயகியாக நடித்திருந்தார். புதுமுக இயக்குநர் விக்னேஷ் ராஜா என்பவர் இயக்கியிருந்தார். 


மேலும் படிக்க | ‘இதெல்லாம் ஒரு பாட்டா..?’ ஜெயிலர் படத்தின் Jujubee பாடலுக்கு ரசிகர்கள் கொடுத்த ரியாக்ஷன்..!


ஓடிடியில் வெளியீடு..!


போர் தொழில் திரைப்படம் எப்போதோ ஓடிடியில் வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்டது. இந்த மாதத்தின் தொடக்கத்திலேயே (ஜூலை 7) சோனி லிவ் தளத்தில் இப்படம் வெளியிடப்படும் என தெரிவிக்கப்பட்டது. ஆனால் இது குறித்த அதிகாரப்பூர்வ தகவல்கள் எதுவும் அந்த நிறுவனத்தின் பக்கத்தில் தெரிவிக்கப்படவில்லை. படக்குழுவின் தரப்பிலும் எதுவும் தெரிவிக்கப்படாமல் இருந்தது. இதையடுத்து படம் இந்த மாதத்தின் இறுதியில் ஓடிடி தளத்தில் வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அதுவும் நடக்கவில்லை. தற்போது, போர் தொழில் திரைப்படம் சோனி லிவ் தளத்தில் அடுத்த மாதம் (ஆகஸ்டு) 4ஆம் தேதியன்று சோனி லிவ் தளத்தில் வெளியாகும் என சினிமா வட்டாரங்களில் தகவல் கசிந்துள்ளது. இருப்பினும், முன்பு போலவே இந்த தகவலுக்கும் படக்குழு மற்றும் சோனி லிவ் தளம் மெளனம் காத்து வருகிறது. 


ரிலீஸ் தள்ளிப்போவது ஏன்..? 


போர் தாெழில் திரைப்படம் பிற கடந்த ஜூன் மாதம் 9ஆம் தேதி வெளியானது. நீண்ட நாட்களுக்கு பிறகு வெளியான நல்ல க்ரைம் த்ரில்லர் பாணியில் எடுக்கப்பட்டிருந்ததாலும் திரைக்கதை நேர்த்தியாக இருந்ததாலும் படம் மக்களிடையே மகத்தான வரவேற்பினை பெற்றது. சில நாட்களிலேயே வசூலையும் அள்ளியது. இன்றுடன் இந்த படம் வெளியாகி 48 நாட்கள் ஆகியுள்ளது. 50வது நாளை எட்டிய பிறகு படத்தின் ஓடிடி ரிலீஸ் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. 


வசூல்..


போர் தொழில் படம், கிட்டத்தட்ட 50ஆவது நாளை எட்டி வரும் நிலையிலும் படம் ரசிகர்கள் மத்தியில் பலத்த வரவேற்பினை பெற்றுள்ளது. ரிலீஸின் முதல் நாளில் மட்டுமே இப்படம் உலகம் முழுவதும் சுமார் 85 லட்சம் வரை வசூலித்திருந்தது. இரண்டாம் நாளில் சராசரியாக 1.60 கோடி வரை இப்படம் கலெக்ட் செய்துவிட்டது. படம் பார்த்த மக்கள் பாசிடிவான விமர்சனங்களை அளித்ததால், இப்படத்திற்கு மவுசு கூடியது. தற்போது வரை, இப்படத்தின் வசூல் 75 கோடியை எட்டியுள்ளதாக கூறப்படுகிறது. 


படத்தின் மொத்த பட்ஜெட்:


பாக்ஸ் ஆஃபிஸ் கலெக்‌ஷனின் காசை அள்ளியுள்ள இப்படம், மிகவும் குறைவான படஜெட்டிலேயே உருவாக்கப்பட்டது. படத்தின் ப்ரொடக்‌ஷன் செலவுகள், நடிகர்களின் சம்பளம் எல்லாம் சேர்த்து சுமார் 6 கோடி ரூபாய் செலவிலேயே இப்படம் உருவாக்கப்பட்டுள்ளது. நல்ல கதையாக இருந்தால் படம் கண்டிப்பாக மக்கள் வரவேற்பினை பெறும் என்பதற்கு, ‘போர் தொழில்’ சிறந்த எடுத்துக்காட்டு. 


மேலும் படிக்க | மிஸ்கின் போல திறமையானவர் ; 'வெப்' இயக்குனர் ஹாரூனுக்கு கார்த்திக் ராஜா பாராட்டு


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ