‘இதெல்லாம் ஒரு பாட்டா..?’ ஜெயிலர் படத்தின் Jujubee பாடலுக்கு ரசிகர்கள் கொடுத்த ரியாக்ஷன்..!

Jailer Third Single Jujubee: ஜெயிலர் படத்தின் மூன்றாவது சிங்கிள் பாடலான Jujubee, இன்று வெளியானது இதைத்தொடர்ந்து ரசிகர்கள் அதற்கு என்ன வகையிலான வரவேற்பு கொடுத்திருக்கிறார்கள் என்று பாரப்போம்.   

Written by - Yuvashree | Last Updated : Jul 26, 2023, 07:16 PM IST
  • ஜெயிலர் படத்தின் மூன்றாவது சிங்கிள் வெளியாகியுள்ளது.
  • இதை தீ பாடியுள்ளார்.
  • இதற்கு ரசிகர்கள் கொடுத்திருக்கும் மார்க் என்ன..?
‘இதெல்லாம் ஒரு பாட்டா..?’ ஜெயிலர் படத்தின் Jujubee பாடலுக்கு ரசிகர்கள் கொடுத்த ரியாக்ஷன்..! title=

ரஜினிகாந்த் நடிப்பில் அடுத்த மாதம் வெளியாகவுள்ள ‘ஜெயிலர்’ படத்தின் மூன்றாவது பாடல் இன்று வெளியாகியுள்ளது. இதற்கு ரசிகர்கள் கலவையான விமர்சனங்களை கொடுத்துள்ளனர். 

நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்துள்ள படம் ஜெயிலர். இந்த படத்தில் தமன்னா முக்கிய கதாப்பாத்திரத்தில் வருகிறார். மோகன்லால், சிவராஜ் குமார் ஆகியோர் காமியோ கதாப்பாத்திரத்தில் வருகின்றனர். இந்த படத்தின் முதல் இரண்டு பாடல்கள் முன்னர் வெளியான நிலையில், இன்று மூன்றாவது பாடல் வெளியாகியுள்ளது. 

Jujubee பாடல்:

ஜெயிலர் படத்தின் இரண்டாவது பாடலான, “ஹுக்கும்” பாடலை எழுதியவர் சூப்பர் சுப்பு. இதையடுத்து, படத்தின் மூன்றாவது பாடலான ஜுஜுபியையும் அவரே எழுதியுள்ளார். இந்த பாடலை பிரபல பின்னணி பாடகி தீ பாடியுள்ளார், அனிருத் இசையமைத்திருக்கிறார். “களவாணி கண்ணய்யா காளைக்கே கொம்ப சீவிப்புட்ட..” என்று தொடங்கும் இப்பாடல் ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது. 

மேலும் படிக்க | இரட்டை அர்த்த வரிகளுடன் ஜெயிலர் பட பாடல்..! ரசிகர்கள் அதிர்ச்சி..!

இதெல்லாம் ஒரு பாடலா..? 

ஒரு சில ரசிகர்கள் இந்த பாடலுக்கு “Average” என்று விமர்சனம் கொடுத்திருக்கின்றனர். ஆனால், இந்த பாடல் வெளியாகியுள்ள யூடியூபில் கமெண்ட் அடித்துள்ள பலர் இதற்கு க்ரீன் சிக்னலே கொடுத்துள்ளனர். 

ஒரு சில ரசிகர்கள் இந்த பாடலை ஒரு முறை கேட்கலாம் என்றும், அடிக்ட் ஆக்கும் வகையில் எதுவும் இதில் இடம் பெறவில்லை என்றும் குறிப்பிட்டுள்ளனர். “கேட்க கேட்க பிடிக்குமோ என்னவோ” என்றும் சில ரசிகர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். 

சில ரசிகர்கள் ரஜினிக்காக இந்த பாடலை பாரக்கலாம் என்று கருத்து தெரிவிக்க, ஒரு சிலர் ‘இதெல்லாம் ஒரு பாடலா..இதை தனி இசை ட்ராக்காக வெளியிட்டிருக்கலாம்…’ என கருத்து தெரிவித்துள்ளனர். 

Jujubee என்றால் என்ன..? 

Jujubee என்றால் ஒரு வகையான இளந்தம்பழம் என சிலர் கருதுகின்றனர். இந்த பழம் சாப்பிடுவதற்கு புளிப்பாகவும் கொஞ்சம் இனிப்பாகவும் இருக்குமாம். ஆனால், தமிழ் நாட்டில் இதை நாம் பல வகைகளில் பயன்படுத்துகிறோம். குறிப்பாக சினிமாவில் “அது ஒரு Jujubee மேட்டரு..” என்பது போன்ற வசனங்கள் பயன்படுத்தப்படுவது உண்டு. அதனால், Jujubee என்றால் ‘எளிது’ என்று அர்த்தப்படுவதாக கூறப்படுகிறது. ரஜினி கூட தன் படங்கள் பலவற்றில் இந்த வார்த்தையை உபயோகித்திருக்கிறார். 

ரசிகர்களின் மார்க்:

ஜெயிலர் படத்தின் ஜுஜுபி பாடல் வெளியானவுடன் நம் (ஜீ தமிழ் நியூஸ்) ட்விட்டர் பக்கத்தில் பாடல் குறித்து ரசிகர்களின் விருப்பத்தை தெரிந்து கொள்ள வாக்கு எடுக்கப்பட்டது. ’நல்லா இருக்கு, ஓகே தான், நல்லா இல்ல, ரொம்ப மோசம்.’ என்று நான்கு வாக்குகள் கொடுக்கப்பட்டிருந்தது. அதில், பெரும்பாலான ரசிகர்கள் 1 வாக்கான, நல்லா இருக்கு என்பதை க்ளிக் செய்துள்ளனர். 

இதையடுத்து ஒரு சில ரசிகர்கள் ’ரொம்ப மோசம்’ என வாக்களித்துள்ளனர். இதற்கு அடுத்தபடியாக ’ஓகேதான்’ என சிலர் வாக்களித்துள்ளனர். மொத்தத்தில், ரஜினியின் ரசிகர்கள் மத்தியில் ஜுஜுபி பாடல் நல்ல வரவேற்பையே பெற்றுள்ளது. 

மேலும் படிக்க | விலை உயர்ந்த வைர மோதிரத்திற்கு சொந்தக்காரியான தமன்னா..? யார் கொடுத்த பரிசு இது..?

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News