போர் தொழில் திரைப்படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதி: சரத்குமார், அசோக் செல்வன் போன்ற பலர் நடித்து வெளிவந்த திரைப்படம், போர் தொழில். பெண்களை கொல்லும் சைக்கோ கொலைகாரனையும் அந்த கொலைகாரன் யார் என்பதை கண்டுபிடிக்கும் இரண்டு காவல் துறை அதிகாரிகளையும் சுற்றி சுழலும் கதை இது. இப்படம், இந்த மாதம் வெளியாக உள்ளதாக அதிகாரப்பூர்மாக அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

சைக்கோ த்ரில்லர் திரைப்படம்
சமீபத்தில் வந்த சைக்கோ த்ரில்லர் திரைப்படங்களிலேயே மக்கள் மத்தியில் அதிக கவனத்தை ஈர்த்த படம் தான் போர் தொழில். இந்த படத்தில் நடிகர் அசோக் செல்வன் கதையின் நாயகனாக நடித்துள்ளார். மேலும் நடிகர் சரத்குமார் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்திருந்தார். அத்துடம் இந்த படத்தில் சரத்பாபு மற்றும் சுனில் சுகாதா ஆகிய இருவரும் வில்லனாக மிரட்டியுள்ளனர். அத்துடன் பஞ்சுமிட்டாய் படத்தில் நாயகியாக நடித்த நிகிலா விமல் தான் இதில் கதையின் நாயகியாக நடித்திருந்தார். இந்த படம் வெளியான முதல் தற்போது வரை ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பினை பெற்று வருகிறது.



மேலும் படிக்க | 3300 கோடியை கட்டிக்காப்பாற்றிய அரவிந்த் சுவாமி! எப்படி தெரியுமா?


ஓடிடி ரிலீஸ் எப்போது? எங்கு?:
போர் தொழில் திரைப்படம், கடந்த ஜூன் மாதம் 9ஆம் தேதி திரையரங்கில் வெளியானது. இந்த படம் நல்ல விமர்சனங்களை பெற்றதால் இப்படத்தை பார்க்க மக்கள் தியேட்டர்களில் குவிந்த வண்ணம் உள்ளனர். இருப்பினும், இப்படம் ஓடிடியில் வெளியிடப்படவுள்ளது. 


இந்நிலையில் தற்போது தமிழ் மட்டுமன்றி பல மொழில் படங்கள் மற்றும் தொடர்களை ஒளிபரப்பும் சோனி லிவ் தளத்தில் இந்த படம் வெளியாகயுள்ளது. இது குறித்து சோனி லிவ் ட்வீட் ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், "முடிந்தது காத்திருப்பு! பாக்ஸ் ஆபிஸ் சாதனைகளை முறியடித்த த்ரில்லர் சென்சேஷன், "போர் தோழில்" ஆகஸ்ட் 11 முதல் சோனி எல்ஐவியில் ஸ்ட்ரீமிங் செய்யப்படுகிறது". என்ற பதிவிட்டுள்ளது.



முதல் படத்திலேயே முத்திரை பதித்த இயக்குனர்
‘போர் தொழில்’ படத்தை, விக்னேஷ் ராஜா என்ற அறிமுக இயக்குநர் இயக்கியிருந்தார். இவர், தனது முதல் படத்திலேயே ‘நச்’சென முத்திரை பதிக்கும் விதமாக போர் தொழில் படத்தை எடுத்திருப்பதாக ரசிகர்கள் கருத்து தெரிவிக்கின்றனர். இது போல இன்னும் பல படங்களை இயக்க வேண்டும் என ரசிகர்கள் இவரிடம் கோரிக்கையும் விடுத்துள்ளனர். ‘ராட்சசன்’படம் போன்ற உணர்வை, இந்த படம் அளித்ததாக ரசிகர்கள் சிலர் கருத்து தெரிவித்தனர். 



பாக்ஸ் ஆஃபிஸ் கலெக்‌ஷன் எவ்வளவு?
போர் தொழில் திரைப்படம் கிட்டத்தட்ட 21 நாட்களை கடந்த பிறகும் திரையரங்குகளில் சக்கை போடு போட்டு வருகிறது. படத்தின் முதல் நாளில் இப்படம் உலகம் முழுவதும் சுமார் 85 லட்சம் வரை வசூலித்திருந்தது. இரண்டாம் நாளில் சராசரியாக 1.60 கோடி வரை இப்படம் கலெக்ட் செய்துவிட்டது. படம் பார்த்த மக்கள் பாசிடிவான விமர்சனங்களை அளித்ததால், இப்படத்திற்கு மவுசு கூடியது. தற்போது வரை, இப்படம் 24.57 கோடி வசூல் செய்துள்ளதாக கூறப்படுகிறது. 


மேலும் படிக்க | சன் டிவி சீரியல் நடிக்களின் ஒரு நாள் சம்பள.. இவ்வளவு பேமண்டா? முழு விவரம்


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ