இரண்டு பாகங்களாக வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்ற படம், கே.ஜி.எஃப். இந்த படத்தை உருவாக்கி இந்தியாவின் மிகப்பெரிய இக்குநர்களின் பட்டியலில் இடம் பிடித்தவர், பிரசாந்த் நீல். இவருடைய அடுத்த படைப்பு, சலார். இந்த படத்தில் பிரபாஸ், பிருத்விராஜ், ஸ்ருதி ஹாசன் என பல நட்சத்திரங்கள் இடம் பெற்றுள்ளனர். இந்த படத்தின் டீசர் சில வாரங்களுக்கு முன்பு வெளியானது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

சலார் திரைப்படம்:


சலார் திரைப்படம் ஆக்ஷன்-த்ரில்லர் கதையாக உருவாகியுள்ளது. படத்தின் ஹீரோவாக வரும் பிரபாஸ் ஒரு கேங்ஸ்டராக நடித்துள்ளார். தனது நண்பனிடம் செய்து கொடுத்த சத்தியத்தை காப்பாற்றும் கதைதான் இது. உயிர் நண்பனின் சாவுக்கு காரணமாக இருந்தவர்களை போட்டுத்தள்ளுவது படத்தின் மீதி கதையாக இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது. மேலும், படம் இரண்டு பாகமாக உருவாகி வருகிறது. முதல் பாகத்திற்கு ‘சாலார்: பார்ட் 1 சீஸ் ஃபயர்’ என்று பெயரிடப்பட்டுள்ளது. 


மேலும் படிக்க | தூக்கிட்ட நிலையில் இளம் நடிகை மரணம்..! கொலையா? தற்கொலையா? ரசிகர்கள் அதிர்ச்சி!


கே.ஜி.எஃப் யுனிவர்ஸ்?


கே.ஜி.எஃப் திரைப்படத்திற்கும் சலார் படத்திற்கும் தொடர்பு இருப்பதாக கூறப்படுகிறது. அப்படத்தின் ஹீரோவான ராக்கி பாய், சலார் படத்தின் ஹீரோவான பிரபாஸின் நண்பனாக இருக்கலாம் என ரசிகர்கள் பல கதைகளை இணையத்தில் அவ்வப்போது அவிழ்த்து விட்டு வருகின்றனர். அதனால், “ஒரு வேளை சலார் திரைப்படம் கே.ஜி.எஃப் யுனிவர்ஸ் படங்களுள் ஒன்றாக இருக்கலாம்..” என்று கருதப்படுகிறது. 


கே.ஜி.எஃப் தொடர் கதை..? 


சலார் படம், கே.ஜி.எஃப் கதையின் ஸ்பின்-ஆஃப் (Spin-Off) ஆக இருக்கும் என இருக்கலாம் என கூறப்படுகிறது. ஒரு படத்தில் வந்த கதாப்பாத்திரத்தின் கதை இன்னொரு கதையில் தாெடர்வதுதான் ஸ்பின்-ஆஃப். கே.ஜி.எஃப் கதையில் வரும் ராக்கி பாய், உயிரிழந்த பிறகு அவரது கதாப்பாத்திரத்தின் கதை இப்படத்தில் தொடரலாம் என கூறப்படுகிறது. கே.ஜி.எஃப் படத்தின் மூன்றாம் பாகம் தயாராக உள்ளது குறிப்பிடத்தக்கது. 


ரிலீஸ் தள்ளி வைப்பு? 


சலார் திரைப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் விறுவிறுப்பாக நடைப்பெற்று வந்தன. இதில் ஒரு பாடல் படமாக்கப்பட  இருந்ததாகவும் இதில், ஒரு நடிகை ஆட இருந்ததாகவும் கூறப்படுகிறது. படத்தின் ஹீரோ பிரபாஸிற்கு முழங்காலில் அறுவை சிகிச்சை மேற்கொள்ள பட்டிருப்பதால் இந்த பாடலை இப்போதைக்கு படமாக்க முடியாமல் போயுள்ளதாம். இதனால், படக்குழு பிரபாஸ் உடல் நலன் பெற்று திரும்பும் வரை காத்திருக்க முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. இது குறித்த அதிகாரப்பூர்வ தகவல்கள் எதுவும் தற்போது வரை வெளியாகவில்லை. 


பெரிய பட்ஜெட் படம்:


இந்திய அளவில், பெரிய பட்ஜெட் கதாநாயகனாக வலம் வருபவர் பிரபாஸ். இவர், தற்போது நடித்துவரும் படம் சலார் சுமார் 200 கோடிக்கும் மேற்பட்ட பொருட்செலவில் உருவாகி வருவதாக கூறப்படுகிறது. இந்த படத்தின் டீசர் ‘சலார் பகுதி 1 : சீஸ் ஃபயர்’ என்ற பெயரில் வெளியானது. “சிங்கம், புலி எல்லாமே பயங்கரமான மிருகம்தான்..ஆனால் ஜுராஸிக் பார்கில் அல்ல..” என்ற டைலாக்குடன் தொடங்கிய இந்த டீசர் வெளியான சில மணி நேரங்களிலேயே கிட்டத்தட்ட 8 மில்லியன் வியூஸ்களை நெருங்கியது. கே.ஜி.எஃப் படத்தில் இடம் பெற்றிருந்த அதே ப்ளாக்-டிண்ட் வகை காட்சிபொருட்கள் இந்த படத்திலும் உபயோகப்படுத்தப்பட்டுள்ளது. படத்தின் ட்ரைலர் வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அதுவும் தற்போது தள்ளிப்போயுள்ளது. 


மேலும் படிக்க | ஜெயிலர் மாஸ் வெற்றி-ரஜினிக்கு பிஎம்டபிள்யூ கார் பரிசு! இதன் விலை இத்தனை கோடியா..?


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ