Kalki 2898 AD Movie Review: மகாநதி படத்தை இயக்கிய நாக் அஸ்வின் எழுதி இயக்கியுள்ள படம் ‘கல்கி 2898 AD’. மிகவும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் இன்று ஜூன் 27ம் தேதி இந்த படம் உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இப்படம் தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளில் வெளியாகவுள்ளது. பிரபாஸ் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து இருக்கும் இந்த படத்தில் அமிதாப் பச்சன், கமல்ஹாசன், தீபிகா படுகோன், திஷா பதானி, ஷோபனா, அன்னா பென், பசுபதி, சாஸ்வதா சாட்டர்ஜி, எஸ்.எஸ்.ராஜமௌலி, பிரம்மானந்தம், ராஜேந்திர பிரசாத், கௌரவ் சோப்ரா மற்றும் மாளவிகா நாயர் ஆகியோர் நடித்துள்ளனர். வைஜெயந்தி பிலிம்ஸ் பேனரின் கீழ் சி அஸ்வினி தத் இந்த படத்தை தயாரித்து உள்ளார். சந்தோஷ் நாராயணன் இசையமைக்க கோட்டகிரி வெங்கடேஸ்வர ராவ் எடிட்டிங் செய்துள்ளார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மேலும் படிக்க | கல்கி 2898 ஏடி சென்சார் குழுவின் விமர்சனம்! அப்ளாஸ் அள்ளுமா? மன்னை கவ்வுமா?


இந்திய இதிகாசங்களான மஹாபாரத கதையை அடிப்படையாக கொண்டு அவற்றில் அறிவியல் சேர்த்து சூப்பர் ஹீரோ படமாக கல்கி 2898 எடுக்கப்பட்டுள்ளது. கல்கி என்பது மகாவிஷ்ணுவின் 10வது அவதாரமாகும், அவர் கலியுகத்தின் முடிவில் அதர்மத்தை முடிவுக்குக் கொண்டு வருகிறார் என்று புராணங்களில் கூறப்படுகிறது.  மகாபாரதப் போர் நடைபெற்று 6000 ஆண்டுகளுக்குப் பிறகு உலகின் கடைசி நகரம் என்று சொல்லப்படும் காசியில் கதை நடக்கிறது. அங்குள்ள மக்களை யாஸ்கின் (கமல்ஹாசன்) என்பவர் ஆட்சி செய்கிறார். அவர் இருக்கும் இடம் அந்தரத்தில் உள்ளது, அதன் பெயர் காம்ப்ளக்ஸ் என்று அழைக்கப்படுகிறது. அங்கு தான் சுத்தமான காற்று, தண்ணீர், உணவு போன்றவை கிடைக்கிறது. எனவே பைரவா (பிரபாஸ்) இந்த சலுகைகளை அனுபவிக்க காம்ப்ளக்ஸ்க்கு செல்வதை வாழ்க்கை லட்சியமாக கொண்டுள்ளார்.


மறுபுறம் காசியில் தனது சாபத்தை போக்க அஸ்வத்தாமா (அமிதாப் பச்சன்) விஷ்ணுவின் பிறப்பிற்காக காத்துகொண்டு இருக்கிறார். மறுபுறம் காம்ப்ளக்ஸில் இருந்து கர்ப்பிணியான தீபிகா படுகோன் தப்பித்து விடுகிறார். இந்த அனைத்திற்கும் ஒவ்வொரு தொடர்பு உள்ளது. இதனை சயின்ஸ் பிக்சன் மற்றும் இதிகாச கதைகளுடன் சுவாரஸ்யமாக சொல்ல முயற்சி செய்து இருக்கிறார் இயக்குனர் நாக் அஸ்வின். பிரபாஸ் நடிப்பில் சமீபத்தில் வெளியான எந்த படங்களும் சரியாக ஓடவில்லை. இந்நிலையில் கல்கி அவருக்கு ஒரு கம்பேக் கொடுத்துள்ளது. வழக்கம் போல ஆக்சன் காட்சிகளிலும், நகைச்சுவை காட்சிகளிலும் சிறப்பாக நடித்துள்ளார். அவரின் ஸ்கிக்ரீன் பிரசன்ஸ் நன்றாக ஒர்க் ஆகி உள்ளது. மறுபுறம் அஸ்வத்தாமாவாக அமிதாப் பச்சன் இந்த வயதிலும் ஆக்சன் காட்சிகளில் பிரமாதமாக நடித்துள்ளார்.


அவரது கதாபாத்திரம் நன்றாக எழுதப்பட்டு இருந்தது. அதனை புரிந்து கொண்டு சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி உள்ளார். அவருடைய நடிப்பின் மூலம் அவருடைய வலியையும் பொறுப்பையும் அவர் நமக்குப் புரிய வைக்க முடியும். படத்தில் முக்கியமான கதாபாத்திரம் என்றால் அது இவரது பாத்திரம் தான். கல்கி முதல் பாதியில் ஒரு சில நிமிடங்கள் மட்டுமே கமல்ஹாசன் வந்தாலும் அந்த கதாபாத்திரத்தின் சக்தியை உணர வைக்கிறார். மேலும் அடுத்த என்ன செய்ய போகிறார் என்ற எதிர்பார்ப்பும் எழுகிறது. தீபிகா படுகோனேவை சுற்றித்தான் கதை நடக்கிறது. சுமதி என்ற கதாபாத்திரத்தில் ஒரு கர்ப்பிணி பெண்ணாக நல்ல நடிப்பை வெளிப்படுத்தி உள்ளார்.


துல்கர் சல்மான், விஜய் தேவரகொண்டா, ராஜேந்திர பிரசாத், பிரம்மானந்தம், திஷா பதானி, ராஜமவுலி ஆகியோரின் கெஸ்ட் ரோல் படத்திற்கு கூடுதல் பலம் சேர்க்கிறது. ஷோபனா, பசுபதி, அன்னா பென் ஆகியோரும் நல்ல நடிப்பை வெளிப்படுத்தி உள்ளனர். கிட்டத்தட்ட 600 கோடியில் உருவாகி உள்ள கல்கி படம் ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்துள்ளது என்றே சொல்லலாம். ஒரு விசுவல் ட்ரீட் ஆக கல்கி படம் அமைந்துள்ளது. படம் ஆரம்பித்த சில நிமிடங்களிலேயே நம்மை அவர்களின் உலகத்திற்கு கொண்டு சென்றுவிடுகின்றனர். இயக்குனர் நாக் அஸ்வின் தான் சொல்ல நினைத்ததை அப்படியே ஸ்கிரீனில் காண்பித்துள்ளார். பல கூஸ்பம்ஸ் கட்சிகளும், ட்விஸ்ட்களும் நன்றாக ஒர்க் ஆகி உள்ளது. அதேபோல VFX காட்சிகளும் கட்சிதமாக உள்ளது.


சந்தோஷ் நாராயணனின் பாடல்கள் மற்றும் பின்னணி இசை சிறப்பாக உள்ளது. ஆக்சன் மற்றும் மாஸ் காட்சிகளை அடுத்த கட்டத்திற்கு கொண்டு சென்றவுள்ளது. 3 மணி நேரம் ஓடும் இந்த கல்கி படம் முடியும் போது அடுத்த பாகத்திற்கான எதிர்பார்ப்பை அதிகரிக்க செய்கிறது. முதல் பாதி சற்று மெதுவாக நகர்ந்தாலும், இரண்டாம் பாதி ஜெட் வேகத்தில் செல்கிறது. படம் முழுக்க பல அதிரடி ஆக்சன் காட்சிகள் இடம் பெற்றுள்ளது. இந்த படத்தில் பணியாற்றியுள்ள ஒவ்வொருவரும் தங்களது முழு உழைப்பை கொடுத்துள்ளனர் என்பது படம் பார்க்கும் போது நமக்கு தெரிய வருகிறது. ஒரு சயின்ஸ் பிக்சன் கதையை முடிந்தவரை நேர்த்தியாக சொல்ல ட்ரை செய்து உள்ளனர்.


மேலும் படிக்க | கமலை காணோம்..கல்கி 2898 ஏடி பட டிரைலருக்கு ரசிகர்கள் கொடுத்த ரியாக்ஷன்!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ