லியோ பட இயக்குநர் லோகேஷ் கனகராஜ் அடுத்து ஒரு பெரிய ஹீரோவை வைத்து படம் இயக்க உள்ளதாக கூறப்படுகிறது. அந்த ஹீரோ யார் என்பது குறித்த தகவல் வெளியாகியுள்ளது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

லோகேஷ் கனகராஜ்:


திரையுலகிற்கு வந்த சில காலங்களிலேயே உச்சம் தொட்ட இயக்குநராக வளர்ந்தவர், லோகேஷ் கனகராஜ். மாநகரம் படத்தின் மூலம் கோலிவுட்டிற்கு நுழைந்த இவர் அடுத்து தமிழ் திரையுலகின் முன்னணி நட்சத்திரங்களான கார்த்தி, விஜய், கமல் ஹாசன் போன்ற பல நடிகர்களை வைத்து பல வெற்றி படங்களை கொடுத்து விட்டார். போதாகுறைக்கு லோகேஷ் கனகராஜ் சினிமாட்டிக்க் யுனிவர்ஸ் என்ற பெயரில் படங்கள் நிறைந்த பிரபஞ்சத்தையும் உருவாக்கி விட்டார். தற்போது விஜய்யை வைத்து லியோ படத்தை இயக்கி வரும் இவர், தனது அடுத்த படத்தில் ஒரு பெரிய ஹீரோவை நடிக்க வைக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 


மேலும் படிக்க | ஹிப்ஹாப் ஆதியின் ‘வீரன்’ ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு



யார் அந்த ஹீரோ? 


லியோ படத்தை அடுத்து லோகேஷ் கைதி2 படத்தை இயக்க உள்ளதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் அவர் இயக்கும் இன்னொரு படம் குறித்த தகவலும் வெளியானது. மாபெரும் பட்ஜெட்டில் உருவாக இருக்கும் அந்த படத்தில் தென்னிந்திய திரையுலகின் பெரிய ஹீரோவை நடிக்க வைக்க இருப்பதாக பேச்சு அடிபடுகிறது. அது வேறு யாரும் இல்லை, ஆதிபுருஷ் படத்தில் நடித்த பிரபாஸ்தான். ஒரு பக்கம் இப்படியொரு தகவல் இருக்க, இன்னொரு பக்கம் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை வைத்து லோகேஷ் ஒரு படத்தை இயக்க உள்ளதாக கூறப்படுகிறது. இதுவே ரஜினிகாந்தின் கடைசி படமாக இருக்கும் என்றும் சொல்லப்படுகிறது. இதனால் லோகேஷ் படத்தில் அடுத்து நடிக்க இருப்பது பிரபாஸா அல்லது ரஜினியா என்பது பலருக்கும் தெரியாத ஒரு புதிராகவே உள்ளது. 


ஆரம்ப கட்ட பணிகள் தொடக்கம்? 


லோகேஷ் கனகராஜ் பிரபாஸை வைத்து இயக்க இருக்கும் படத்தின் ஆரம்பக்கட்ட பணிகள் விரைவில் தொடங்க இருப்பதாக கூறப்படுகிறது. லியோ படத்தின் பணிகளே இன்னும் முடியாத நிலையில் இந்த படத்தின் பணிகள் எப்போது ஆரம்பிக்கும் எனும் தகவல் இன்னும் வெளியாகவில்லை. 


சினிமாவை விட்டு விலகும் லோகேஷ்? 


இயக்குநர் லோகேஷ் கனகராஜ் சில நாட்களுக்கு முன்பு ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். அப்போது பேசிய அவர், தனக்கு 20-30 வருடங்கள் எல்லாம் சினிமாவில் இருக்க வேண்டும் என்ற ஆசை இல்லை என்று கூறினார். மேலும் எல்.சி.யூவில் சில படங்களை இயக்கிவிட்டு மொத்தமாக 10 படங்களை இயக்கியவுடன் சினிமாவை விட்டு விலக இருப்பதாக கூறினார். இதனால் ரசிகர்கள் அதிர்ந்து போயுள்ளனர். 


தமிழகத்தின் டரண்டினோ? 


ஹாலிவுட்டின் பிரபல இயக்குநராக வலம் வருபவர்,  குயிண்டன் டரண்டினோ. இவர், இதுவரை இயக்கியுள்ள படங்களில் பிரபலமான ஹீரோக்களை மட்டுமே நடிக்க வைத்துள்ளார். அது மட்டுமன்றி, சிறந்த ஆக்ஷன்-த்ரில்லர் கதையைத்தான் படமாக எடுப்பார். இவரும், தான் 10 படங்களை இயக்கிய பிறகு சினிமாவை விட்டு விலகுவதாக தெரிவித்திருந்தார். இதனால், லோகேஷ் கனகராஜ்தான் தமிழ் சினிமாவின் டரண்டினோவா? என ரசிகர்கள் ஆச்சரியத்தில் ஆழ்ந்துள்ளனர். 


25 மில்லியன்களை கடந்த “நான் ரெடி” பாடல்..


விஜய் நடிப்பில் உருவாகி வரும் லியோ திரைப்படத்தின் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை எட்டி வருகிறது. இந்த படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கள், விஜய்யின் பிறந்தநாளையொட்டி இரண்டு நாட்களுக்கு முன்பு வெளியானது. வெளியான 5 நிமிடங்களிலேயே இப்படம் 5 மில்லியன் பார்வையாளர்களையும் கடந்தது. இந்த நிலையில் இப்பாடல் தற்போது வரை 25 மில்லியன் வியூஸ்களை கடந்து ட்ரெண்டிங்கிள் உள்ளது. 


மேலும் படிக்க | Kamal Haasan: Project K படத்தில் இணைந்த கமல் ஹாசன்..! இதுதான் அவரது கதாப்பாத்திரமா?


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ