ஹிப்ஹாப் ஆதியின் ‘வீரன்’ ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு

ஹிப்ஹாப் ஆதி நடித்து கடந்த ஜூன் 2ஆம் தேதி திரையரங்குகளில் வெளியான ‘வீரன்’ திரைப்படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

Written by - Vijaya Lakshmi | Last Updated : Jun 25, 2023, 12:22 PM IST
  • ஜூன் 2ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது வீரன்.
  • மீண்டும் வெளியாகும் ஹிப்ஹாப் ஆதியின் வீரன்.
  • வீரன் படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.
ஹிப்ஹாப் ஆதியின் ‘வீரன்’ ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு title=

மரகத நாணயம் படத்தை இயக்கிய ஏஆர்கே சரவன் இயக்கத்தில் ஹிப் ஹாப் தமிழா ஆதி நடித்துள்ள வீரன் படம் கடந்த ஜூன் 2 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. வீரன் படத்தின் டிரைலர் வெளியானதில் இருந்து இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிக அளவில் இருந்தது, காரணம் தமிழில் இதுவரை வெளியான சூப்பர் ஹீரோ படங்கள் எதுவும் வெற்றியடைந்தது இல்லை. மேலும் இந்த படம் சமீபத்தில் மலையாளத்தில் வெளியான மின்னல் முரளி படத்தின் கதை போலவும் இருந்தது.  வீரன் படத்தில் ஹிப் ஹாப் தமிழா தவிர ஆதிரா ராஜ், வினை, பத்ரி, முனிஷ் காந்த், சசி செல்வராஜ், காளி வெங்கட், நக்கலைட்ஸ் செல்லா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

ஹிப் ஹாப் தமிழா ஆதி குமரன் என்ற கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். பொள்ளாச்சி அருகே உள்ள வீரனூர் என்ற கிராமத்தில் கதை தொடங்குகிறது.  குமரனுக்கு 15 வயதில் பள்ளி முடிந்து வீடு திரும்பும் போது மின்னல் அவர் மீது படுகிறது, பின்பு மருத்துவமனையில் சேர்த்தாலும் அவருக்கு சுய நினைவு திரும்பவில்லை. இதனால் அவரை சிங்கப்பூருக்கு அழைத்து செல்கின்றனர்.  15 ஆண்டுகளுக்குப் பிறகு வீரனூர் மற்றும் அதன் சுற்றுவட்டார கிராமத்தில் கரண்ட் தயாரிப்பதற்காக மண்ணுக்கடியில் கம்பிகளை பதிக்கின்றனர், இந்த கம்பி வெடித்தால் அந்த ஊரே தரைமட்டம் ஆகிவிடும் என்பது குமரனுக்கு தெரிய வருகிறது.  மின்னல் வெட்டியதால் குமரனுக்கு சில சக்திகளும் கிடைக்கிறது, இதனை வைத்து வீரனூர் கிராமத்தை குமரன் எப்படி காப்பாற்றுகிறார் என்பதே வீரன் படத்தின் கதை.

மேலும் படிக்க | போதை பொருளுக்கு நிறைய பேர் அடிமையாகிட்டாங்க- ஐஸ்வர்யா ராஜேஷ் வருத்தம்

பக்கா ஃபேமிலி என்டர்டைனர் படமாகவும் வித்தியாசமான சூப்பர் ஹீரோ படமாகவும் வீரன் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. மேலும் சமீபத்தில் வீரன் திரைப்படத்தின் சண்டை காட்சிகளின் மேக்கிங் வீடியோ ஒன்று வெளியாகி வைரலாகி வருகின்றது. 

இந்த நிலையில் தற்போது டிஜிட்டல் வெளியீட்டு உரிமையை அமேசான் ப்ரைம் நிறுவனம் கைப்பற்றியிருந்த நிலையில், வீரன் திரைப்படத்தின் ஒடிடி ரிலீஸ் தேதியை வெளியிட்டுள்ளது படக்குழு. அதன்படி வரும் ஜூன் 30 ஆம் தேதி முதல் ஹிப் ஹாப் ஆதியின் வீரன் திரைப்படம் அமேசான் பிரைம் ஒடிடி தளத்தில் ஒளிப்பரபாகவுள்ளது. இந்த அறிவிப்பினை ரசிகர்கள் வெகுவாக பகிர்ந்து வைரலாக்கி வருகின்றனர்.

இதற்கிடையில் தற்போது ஹிப் ஹாப் ஆதி இசையில் உருவான ‘வீரன் திருவிழா’ என்ற பாடலின் வீடியோவை படக்குழு தற்போது வெளியிட்டுள்ளது. பாடலாசிரியர் முத்தமிழ் வரிகளில் பின்னணி பாடகர்கள் சின்ன பொண்ணு, முத்து சிற்பி, பிரணவம் சசி ஆகியோருடன் இணைந்து ஹிப் ஹாப் ஆதி இப்பாடலை பாடியுள்ளார். தற்போது இப்பாடலின் வீடியோ வைரலாகி வருகிறது.

வீரன் படத்தின் வெற்றியையடுத்து ஹிப்ஹாப் ஆதி விளையாட்டு ஆசிரியர் கதாபாத்திரத்தில் தற்போது PT Sir என்ற படத்தில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க | அடுத்த வாரம் பெரிய அறிவிப்பு ஒன்று வெளியாக உள்ளது - நடிகர் சதீஷ்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News