Priyanka Mohan Salary In Captain Miller: அருண் மாத்தேஸ்வரன் இயக்கத்தில்தனுஷ் நடித்துள்ள படம், கேப்டன் மில்லர். இந்த படம், கடந்த ஜனவரி 12ஆம் தேதி வெளியானதை தொடர்ந்து ரசிகர்கள் நல்ல விமர்சனங்களை கொடுத்துள்ளனர். இதில் பிரியங்கா மோகன் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்திருக்கிறார். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

கேப்டன் மில்லர்:


கேப்டன் மில்லர் படத்தில் தனுஷ் கதாநாயகனாக நடித்துள்ளதை தொடர்ந்து, அவருடன் சேர்ந்து பல மொழிகளை சேர்ந்த முக்கிய நடிகர்கள் நடித்துள்ளனர். கன்னட நடிகர் சிவராஜ் குமார், தெலுங்கு நடிகர் சந்தீப் கிஷன், பிரியங்கா மோகன், அதிதி பாலன் உள்ளிட்ட பலர் இதில் முக்கிய கதாப்பாத்திரங்களாக நடித்துள்ளனர். 


கேப்டன் மில்லர் படத்தின் படப்பிடிப்பு 3 வருடங்களாக நடைப்பெற்று வந்ததை தொடர்ந்து, படம் 3 தினங்களுக்கு முன்பு வெளியானது. படத்திற்கு ரசிகர்கள் கலவையான விமர்சனங்களை கொடுத்து வருகின்றனர். பிரியங்கா மோகன், இதுவரை தனது படங்களில் க்யூட்டான ஹீரோயினாகவே நடித்து வந்தார். சில படங்களில் முக்கிய கதாப்பாத்திரங்கள் கொடுக்கப்பட்டாலும், ஒரு கதாப்பாத்திரத்தை உள்வாங்கி நடிக்கும் அளவிற்கான வாய்ப்பு அவருக்கு கிடைக்காமல் போனது. அது, கேப்டன் மில்லர் படம் மூலம் தீரும் என கூறப்பட்டது. ஆனால், குழந்தை கையில் துப்பாக்கியை கொடுத்தது போல, பிரியங்கா மோகனின் கையில் கொடுக்கப்பட்டிருந்ததாக ரசிகர்கள் விமர்சனங்களை தெரிவித்திருந்தனர். 


மேலும் படிக்க | கேப்டன் மில்லர் பாக்ஸ் ஆபிஸ் கலக்ஷன்: மூன்றே நாளில் இத்தனை கோடி வசூலா!


கேப்டன் மில்லர் பட்ஜெட், சம்பள விவரங்கள்..


கேப்டன் மில்லர் படம் சுமார் ரூ.50 கோடி பட்ஜெட்டில் உருவானதாக கூறப்படுகிறது. இதில், நாயகனாக நடித்த தனுஷ் ரூ.15 கோடி சம்பளமாக பெற்றதாக கூறப்படுகிறது. சிவராஜ் குமார், இதில் நடிப்பதற்காக ரூ.4 கோடி சம்பளமாக பெற்றுள்ளதாக கூறப்படுகிறது. சந்தீப் கிஷன், 50 லட்சம் சம்பளமாக பெற்றுள்ளாராம். 


பிரியங்கா மோகன் சம்பளம்..


கேப்டன் மில்லர் படத்தில் பிரியங்கா மோகன் தனுஷின் காதலியாக நடித்திருக்கிறார். இந்த படத்தில் நடிப்பதற்காக அவர், ரூ.1 கோடியை சம்பளமாக பெற்றுள்ளதாக கூறப்படுகிறது. இவர், ஒரு படத்திற்கு பொதுவாக 70 லட்சத்தில் இருந்து 80 லட்சம் வரை வாங்கி வந்ததாகவும், கேப்டன் மில்லர் படம் மூலம் தனது சம்பளத்தை உயர்த்தியுள்ளதாக கூறப்படுகிறது. 


பிரியங்காவின் அடுத்தடுத்த படங்கள்..


பிரியங்கா மோகன், சினிமா உலகிற்கு வந்த புதிதில் டிக்டாக் என்ற படத்தில் நடித்தார். ஆனால் சில பிரச்சனைகள் காரணமாக இப்படத்தின் ரிலீஸ் தள்ளிப்போனது. இந்த படம், சில நாட்களுக்கு முன்னர்தான் வெளியானது. இதையடுத்து, இவர் சில தெலுங்கு படங்களிலும் நடித்து வருகிறார். ஓஜி என்ற பவன் கல்யாணின் படத்திலும், சரிபோதா சனிவாரம் என்ற படத்திலும் இவர் நடித்துள்ளார். அடுத்து, ப்ரதர் என்ற படத்திலும் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார். இப்படத்தில் இவர் ஜெயம் ரவிக்கு ஜோடியாக நடிக்கிறார். இந்த படங்களின் படப்பிடிப்பு தற்போது நடைப்பெற்று வருகிறது. 


மேலும் படிக்க | Dhanush Salary: ‘கேப்டன் மில்லர்’ படத்தில் நடிக்க தனுஷ் வாங்கிய சம்பளம் எவ்வளவு?


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ