ஒவ்வொரு பெரிய பட்ஜெட் திரைப்படம் வெளியாகும்போது யாரோ ஒருவர் அந்த படத்தின் மீது வழக்கு போடுவதும், அல்லது கருத்து பிரச்சனையை எழுப்பி தடை போடுவதும் தொடர்ந்து நடந்து வருகிறது. குறிப்பாக விஜய் படங்களுக்கு இந்த மாதிரியான பிரச்சனைகள் அதிகம். ஆனால் தற்போது வெளியாக இருக்கும் பீஸ்ட் திரைப்படத்திற்கு புதுமாதிரியான வில்லங்கம் தலைதூக்கியுள்ளது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

திருச்சி, தஞ்சாவூர் வட்டத்தில் பீஸ்ட் திரைப்படத்தை வாங்கியிருக்கும் ஜிடி என்ற விநியோகஸ்தர் படத்திற்கு அதிக விலை சொல்வதால் அந்த படத்தை வாங்க முடியவில்லை என கும்பகோணம் வாசு திரையரங்கம் தெரிவித்துள்ளது. இதனால் ரசிகர்கள் கலக்கத்திற்கு ஆளாகியுள்ளனர்.


 



 


மேலும் படிக்க | விஜய்யின் அழைப்புக்காக காத்திருக்கும் அல்போன்ஸ் புத்திரன்!


இதேபோல பிரச்சனை அறந்தாங்கி சுபா திரையரங்கில் எதற்கும் துணிந்தவன் திரைப்படம் வெளியானபோது வந்தது. நாங்கள் படத்தை திரையிட தயாராக இருக்கிறோம். ஆனால் விநியோகஸ்தர் தனிப்பட்ட வன்மம் காரணமாக படத்தை தர மறுக்கிறார் என ட்வீட் செய்திருந்தனர். இந்த நிலையில் மீண்டும் பீஸ்ட் திரைப்படத்திற்கு அதே மாதிரியான சிக்கல் ஏற்பட்டுள்ளது.


 



 


தமிழ் புத்தாண்டுக்கு விஜய் நடிப்பில் பீஸ்ட் திரைப்படம் வெளியாகவுள்ள நிலையில் இப்படி சிக்கல்கள் தொடங்கியிருப்பது ரசிகர்களை கவலையுற செய்துள்ளது. ஆனால் சன் பிக்ச்சர்ஸ் இந்த விவகாரத்தில் தலையிட்டு தீர்வு காணும் என நம்பிக்கையோடு அவர்கள் காத்திருக்கிறார்கள்.


மேலும் படிக்க | பீஸ்ட் படத்தின் மெயின் வில்லன் இவரா? ஏகபோக மகிழ்ச்சியில் ரசிகர்கள்!


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR