ரஜினி படத்திற்கு “மேக் இன் இந்தியா” அந்தஸ்து
மத்திய அரசு முழுக்க முழுக்க இந்திய தொழில்நுட்பத்தையும் பயன்படுத்தி இந்தியாவில் தயாரிக்கப்படும் பொருட்களுக்கு மேக் இன் இந்தியா அந்தஸ்து வழங்கப்படுகிறது. மேலும் அங்கீகாரமும் சில சலுகைகளும் வழங்கி வருகிறது.
அந்த வகையில் சூப்பர் ரஜினி நடிக்கும் 2.O படம் மேக் இன் இந்தியா அந்தஸ்தை பெறுகிறது. சுமார் 400 கோடி ரூபாய் செலவில் லைக்கா நிறுவனம் தயாரிப்பில் இந்தப் படம் முழுக்க முழுக்க இந்திய தொழில்நுட்ப கலைஞர்களை கொண்டு இந்தியாவிலேயே உலகத் தரத்தில் தயாராகி உள்ளது.
தமிழ், தெலுங்கு, இந்தி, ஆங்கிலம், ஜப்பான், கொரியன், சீனம் என 7 மொழிகளில் தயாராகும் இந்தப் படத்தின் படபிடிப்பு முழுவதும் இந்தியாவிலேயே நடத்தப்பட்டுள்ளது. இதன் அனைத்து தொழில்நுட்பம் இந்தியாவிலே உருவாக்கப்பட்டது.
எனவே இப்படத்திற்கு “மேக் இன் இந்தியா” அந்தஸ்து வழங்கப்படுகிறது.