இம்சை அரசன் 23-ம் புலிகேசி 2-ம் பாகம் விரைவில் தொடங்கப்படும் என இயக்குனர் ஷங்கர் தனது டிவிட்டர் பக்கத்தில் அறிவித்துள்ளார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

கடந்த 2006-ம் ஆண்டு இயக்குநர் ஷங்கர் தயாரிப்பில், சிம்பு தேவன் இயக்கத்தில் வெளியான படம் இம்சை அரசன் 23-ம் புலிகேசி. 


வடிவேலு, மனோரமா, நாசர், தேஜ ஶ்ரீ, மோனிக்கா, இளவரசு, ஶ்ரீமான் உள்ளிட்ட பலர் இந்த படத்தில் நடித்திருந்தனர். சபேஷ் - முரளி இசையமைத்திருந்தனர்.


இந்நிலையில், இந்த படம் வெளியாகி 11 ஆண்டுகள் நிறைவடைந்துவிட்டது. இதையொட்டி இயக்குனர் மற்றும் தயாரிப்பாளருமான ஷங்கர் தனது டிவிட்டரில் இம்சை அரசன் 23-ம் புலிகேசி 2-ம் பாகம் விரைவில் தொடங்கும் என தெரிவித்துள்ளார்.