விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி கொண்டிருக்கும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் ஐந்து சீசன்கள் வெற்றிகரமாக முடிவடைந்து, தற்போது இந்நிகழ்ச்சியின் ஆறாவது சீசன் வெற்றிகரமாக ஓடிக்கொண்டு இருக்கின்றது.  கடந்த மாதம் 21 போட்டியாளர்களுடன் தொடங்கப்பட்ட பிக்பாஸ் -6 நிகழ்ச்சியிலிருந்து இதுவரை 7 போட்டியாளர்கள் வெளியேறிவிட்டனர்.  முதலில் ஜி.பி.முத்து தானாகவே முன்வந்து விலகினார், அவரை தொடர்ந்து சாந்தி, அசல் கோளாறு, ஷெரினா, நிவாஷினி, மகேஸ்வரி, உள்ளிட்டவர்கள் வெளியேற்றப்பட்டனர்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இதற்கிடையில் சென்ற வாரம் நடைபெற்ற எவிக்‌ஷனில் ராபர்ட் மாஸ்டர் வெளியேறினார். மேலும் அந்த வாரத்திற்கான கேப்டனாக அஜீம் தேர்வாகி இருந்தார், அத்துடன் நாமினேஷன் பட்டியலில் தனலட்சுமி, ஜனனி, மைனா, ரச்சிதா, குயின்சி, கதிரவன் ஆகியோர் இடம்பெற்று இருந்தனர். 


மேலும் படிக்க | வருங்கால கணவரின் முதல் திருமணத்திலேயே நடனமாடிய ஹன்சிகா... வைரலாகும் வீடியோ


இந்நிலையில் தற்போது வரை பிக்பாஸ் சீசன் ஐம்பது நாட்களை கடந்து ஓடிக்கொண்டிருக்கிறது. தற்போது வைல்ட் கார்டு எண்ட்ரியாக பரபரப்பான போட்டியாளரை களத்தில் இறக்க பிக் பாஸ் யோசித்துக்கொண்டு வருகின்றது. இதற்கிடையில் இந்த வாரம் யார் வெளியேறுவார் என்பதை அரிய மக்கள் ஆர்வமாக உள்ள நிலையில் தற்போது வெளியாகியுள்ள தகவலின் படி குயின்ஸி தான் வீட்டைவிட்டு வெளியேறியிருக்கிறார் என்று கூறப்படுகிறது.



ஆனால் சிலருக்கு குயின்ஸி வெளியேறியது கொஞ்சம் கஷ்டமாக தான் உள்ளது. தற்போது வீட்டில் இருந்து வெளியேறியுள்ள குயின்ஸி ஒரு வாரத்திற்கு ரூ. 15 ஆயிரம் முதல் ரூ. 20 ஆயிரம் வரை சம்பளம் பேசப்பட்டு உள்ளே சென்றதாக கூறப்படுகிறது.


மேலும் படிக்க | மனைவி வெளியிட்ட நிர்வாண புகைப்படம்! பின்னணியை உடைத்த விஷ்ணு விஷால்


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ