ராபர்ட் மாஸ்டருக்கு இவ்ளோ சம்பளமா? பிக் பாஸ் வீட்டுல அப்படி என்ன பன்னாரு?

பிக்பாஸ் போட்டியிலிருந்து இதுவரையில் ஜிபி முத்து, சாந்தி, அசல் கோளாறு, ஷெரினா, நிவாஷினி, மகேஸ்வரி, ராபர்ட் மாஸ்டர் உள்ளிட்டவர்கள் வெளியேற்றப்பட்டுள்ளனர்.

Written by - Vijaya Lakshmi | Last Updated : Nov 28, 2022, 12:33 PM IST
  • பிக்பாஸில் இருந்து வெளியேறிய ராபர்ட் மாஸ்டர்.
  • அசல் கோளாரை சந்தித்த ராபர்ட் மாஸ்டர்.
  • லட்சங்களை சம்பளமாக வழங்கிய பிக் பாஸ்.
ராபர்ட் மாஸ்டருக்கு இவ்ளோ சம்பளமா? பிக் பாஸ் வீட்டுல அப்படி என்ன பன்னாரு?

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி கொண்டிருக்கும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் ஐந்து சீசன்கள் வெற்றிகரமாக முடிவடைந்து, தற்போது இந்நிகழ்ச்சியின் ஆறாவது சீசன் வெற்றிகரமாக ஓடிக்கொண்டு இருக்கின்றது.  கடந்த மாதம் 21 போட்டியாளர்களுடன் தொடங்கப்பட்ட பிக்பாஸ் -6 நிகழ்ச்சியிலிருந்து இதுவரை 7 போட்டியாளர்கள் வெளியேறிவிட்டனர்.  முதலில் ஜி.பி.முத்து தானாகவே முன்வந்து விலகினார், அவரை தொடர்ந்து சாந்தி, அசல் கோளாறு, ஷெரினா, நிவாஷினி, மகேஸ்வரி, உள்ளிட்டவர்கள் வெளியேற்றப்பட்டனர்.

இதற்கிடையில் நேற்று முன்தினம் அதாவது சனிக்கிழமை நடைபெற்ற எவிக்‌ஷனில் ராபர்ட் மாஸ்டர் வெளியேறி இருக்கிறார். பிக்பாஸ் 6வது சீசனில் மிகவும் ஸ்ட்ராங்கான போட்டியாளராக மக்களால் முதலில் பார்க்கப்பட்டவர் நடன இயக்குனர் ராபர்ட் மாஸ்டர். ஆனால் அவரோ விளையாட்டில் அதிக கவனம் செலுத்துவதை விட நடிகை ரச்சிதா பின்பு சுற்றுவதையே முக்கிய வேலையாக பார்த்துள்ளார். இதுவே அவர் எலிமிநேட் ஆனதற்கு முக்கிய காரணமாக இருக்கலாம்.

மேலும் ராபர்ட் மாஸ்டர் எப்போது பார்த்தாலும் எங்காவது உட்கார்ந்து கொண்டு ரச்சிதா பற்றிப் பேசிக்கொண்டு இருப்பது, அவரை ரசிப்பது, வழிந்து பேசுவதே என்று இருந்து கொண்டு வந்தது ரசிகர்களுக்கு எரிச்சலை ஊட்டி வந்தது.

மேலும் படிக்க | வாரிசுக்காக வரிந்து கட்டிக்கொண்டு இறங்கிய சிம்பு! தெறி அப்டேட்

இந்த நிலையில் சென்ற வாரம் நாமினேஷனில் தேர்வு செய்யப்பட்டவர்களிலிருந்து குறைவான வாக்குகளைப் பெற்ற ராபர்ட் மாஸ்டரின் ஒரு நாள் சம்பளம் எவ்வளவு என்கிற தகவல் வெளியாகி உள்ளது, அதன்படி ராபர்ட் மாஸ்டருக்கு ஒரு வாரம் ரூ. 1.50 முதல் ரூ. 2 லட்சம் சம்பளம் கொடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது, ஆனால் இந்த சம்பள விவரம் எந்த அளவிற்கு உண்மை என்பது தற்போதைக்கு தெரியவில்லை.

அந்தவகையில் ராபர்ட் மாஸ்டர் பிக்பாஸ் வீட்டில் மொத்தமாக 6 வாரங்கள் இருந்த நிலையில் அவர் 12 கோடி ரூபாய் சம்பளமாகப் பெற்று இருப்பார் என கூறப்படுகிறது.

இதனிடையே பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறிய ராபர்ட் மாஸ்டர் முதலில் அசல் கோளாரை சந்தித்துள்ளார். இவர்களின் புகைப்படம் தற்போது டிரெண்டாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

 
 
 
 

 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by வசா.b (@asalkolaar)

மேலும் படிக்க | பிக்பாஸ் வீட்டை விட்டு இந்த வாரம் வெளியேறப்போகும் போட்டியாளர்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

More Stories

Trending News