Raayan Pre Booking Update: நடிகர் தனுஷ் இயக்கி நடித்துள்ள படம் ராயன். தனுஷின் 50வது படமான இந்தப் படத்தினை இயக்குநர் தனுஷ் தானே இயக்கி நடித்துள்ளார். தற்போது இந்த படத்தின் முதல் ப்ரீ புக்கிங் தொடங்கியுள்ளது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ராயன் திரைப்படம் :
திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வந்து கொண்டிருப்பவர், தனுஷ். கிட்டத்தட்ட 20 ஆண்டுகளுக்கும் மேலாக கோலிவுட் சினிமாவின் திறமை மிகு கதாநாயகர்களில் ஒருவராக உள்ளார். தற்போது இவர், தனது கைவசம் பல படங்களை வைத்துள்ளார். அதன்படி தற்போது அவரது 50வது படமான ‘ராயன்’ (Dhanush Raayan Movie) படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தை தானே இயக்கி நடித்துள்ளது என்பது பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளது. மேலும் இந்த படத்தில் தனுஷூடன் இணைந்து எஸ்ஜே சூர்யா, செல்வ ராகவன், சந்தீப் கிஷன், காளிதாஸ், பிரகாஷ்ராஜ், துஷாரா விஜயன், அபர்ணா முரளி ஆகியோர் இணைந்து நடிக்கின்றனர். சன் பிக்சர்ஸ் தயாரித்துள்ள இந்தப் படத்திற்கு இசைப்புயல் ஏ.ஆர். ரகுமான் இசை அமைத்துள்ளார். கேங்ஸ்டர் மற்றும் குடும்ப செண்டிமெண்ட்டை மையமாகக் கொண்டு இந்த படம் எடுக்கப்பட்டுள்ளது.


இசை வெளியீட்டு விழா:
சமீபத்தில் இந்த படத்திற்கான இசை வெளியீட்டு விழா சென்னையில் மிகவும் பிரம்மாண்டமாகவும் கோலாகலமாகவும் நடைபெற்றது. ஏ.ஆர். ரகுமான் இசை அமைத்துள்ள இந்தப் படத்தில் மொத்தம் ஐந்து பாடல்கள் இடம் பெற்றுள்ளது. இதில் அடங்காத அசுரன் என்ற பாடலை படக்குழு தரப்பில் இருந்து முதலில் ரிலீஸ் செய்தனர். இந்த பாடலை தனுஷ் இசைப்புயல் ஏ.ஆர். ரகுமானுடன் இணைந்து பாடியுள்ளார்.


மேலும் படிக்க | இந்தியன் 2 படம் இதுவரை செய்துள்ள வசூல்.. பாக்ஸ் ஆபிஸ் கலெக்ஷன் இதோ


ராயன் படத்தின் டிரைலர்:
சமீபத்தில் இந்த படத்திற்கு, தணிக்கை வாரியம் 'ஏ' சான்றிதழ் கொடுத்து இருந்தது. மேலும் ராயன் படத்தின் டிரைலர் கடந்த ஜூலை 16 ஆம் தேதி வெளியாகி படத்தின் மீதான எதிர்பார்ப்பை எகிற வைத்துள்ளது. மேலும் இந்த ட்ரைலரை இதுவரை 12 மில்லியனுக்கும் அதிகமானோர் யூடியூப் தளத்தில் பார்த்துள்ளனர்.


ராயன் படம் ரிலீஸ்:
இதனிடையே தற்போது இந்த படம் வருகிற 26ஆம் தேதி வெளியாகிறது. சமீபத்தில் வெளிவந்த ராயன் படத்தின் ட்ரைலர் மக்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பை பெற்ற நிலையில், இப்படத்தின் ப்ரீ புக்கிங் பட்டையை கிளப்பி வருகிறது. 



ராயன் ப்ரீ புக்கிங் வசூல்:
இந்நிலையில் தற்போது இதுவரை உலகளவில் ரூ. 1.5 கோடிக்கும் மேல் ராயன் படம் வசூல் செய்துள்ளதாக கூறப்படுகிறது. மேலும் ப்ரீ புக்கிங்கிலேயே இந்த படத்திற்கு இவ்வளவு மாஸான வரவேற்பு கிடைத்துள்ளதால், ராயன் படம் வசூல் ரீதியாக கட்டாயம் சாதனை படைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.



 மேலும் படிக்க | அடுத்தெடுத்து வெளியாக உள்ள பெரிய தமிழ் படங்கள்.. மிஸ் பண்ணிடாதீங்க


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ