Dhanush 50: Raayan Trailer Update: தனுஷின் ஐம்பதாவது திரைப்படமான ராயன் திரைப்படத்தின் டிரைலர் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ராயன் திரைப்படம் :
திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வந்து கொண்டிருப்பவர், தனுஷ். கிட்டத்தட்ட 20 ஆண்டுகளுக்கும் மேலாக கோலிவுட் சினிமாவின் திறமை மிகு கதாநாயகர்களில் ஒருவராக உள்ளார். தற்போது இவர், தனது கைவசம் பல படங்களை வைத்துள்ளார். சில நாட்களுக்கு முன்பு அவரது 50வது படத்திற்கு ‘ராயன்’ (Dhanush Raayan Movie) என பெயர் வைத்துள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது. இந்த படத்தை தனுஷ் இயக்கி அவரே நடிக்கிறார். மேலும் இந்த படத்தில் தனுஷூடன் இணைந்து எஸ்ஜே சூர்யா, செல்வ ராகவன், சந்தீப் கிஷன், காளிதாஸ், பிரகாஷ்ராஜ், உஷாரா விஜயன், அபர்ணா முரளி வரலட்சுமி சரத்குமார் ஆகியோர் இணைந்து நடிக்கின்றனர். சன் பிக்சர்ஸ் தயாரித்துள்ள இந்த படத்திற்கு இசைப்புயல் ஏஆர் ரஹ்மான் இசையமைத்துள்ளார். கேங்ஸ்டர் மற்றும் குடும்ப செண்டிமெண்ட்டை மையமாகக் கொண்டு இந்த படத்தின் ஷூட்டிங் நடத்தி தற்போது முடிக்கப்பட்டுள்ளது.


ராயன் படத்தின் இசை வெளியீடு:
முன்னதாக கடந்த தினங்களுக்கு முன்பு ராயன் படத்தின் இசை வெளியீட்டு விழா நடைப்பெற்றது. மேலும் இந்த விழாவில் நடந்த பல சுவாரசியமான விஷயங்கள் வைரலானது. 


மேலும் படிக்க | வசீகரிக்கும் அழகு.. தங்கம் போல மிளிரும் நயன்தாரா உடன் விக்னேஷ் சிவன்


ராயன் படத்தின் டிரைலர்:
இந்நிலையில் தற்போது இந்த படத்திற்கு, தணிக்கை வாரியம் 'ஏ' சான்றிதழ் கொடுத்துள்ளது. மேலும் ராயன் படத்தின் டிரைலர் வருகிற ஜூலை 16 ஆம் தேதி வெளியாகும் என தயாரிப்பு நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. அதனுடன் திரைப்படம் வரும் 26ம் தேதி ரிலீசாக இருப்பதாக கூறப்படுகிறது.



 



 நடிகர் தனுஷின் அடுத்தடுத்த படங்கள் :
இதினிடையே தற்போது நடிகர் தனுஷ், “நிலவுக்கு என் மேல் என்னடி கோபம்” (Nilavukku Enmel Ennadi Kobam) என்ற படத்தை இளம் நடிகர்களை வைத்து இயக்கி முடித்துள்ளார். இப்படத்தில் தனுஷின் அக்கா மகன் ஹீரோவாக அறிமுகமாகிறார். இதில் பிரியா வாரியர், மேத்யூ தாமஸ், அனிகா சுரேந்திரன் என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடிக்கிறது. ஜிவி பிரகாஷ் இப்படத்திற்கு இசையமைக்கிறார். இதனிடையே தான் கமிட் செய்தபடி சேகர் கம்முலா இயக்கத்தில் அடுத்ததாக டி51 படத்தில் (D51) தற்போது நடித்து வருகிறார். அதைத் தொடர்ந்து மாரி செல்வராஜ் இயக்கும் ஒரு படத்திலும் தனுஷ் நடிக்க இருக்கிறார். அடுத்து ‘ராஞ்சனா’ பட இயக்குநர் ஆனந்த் எல்.ராஜ் இயக்கும் ‘தேரி இஷ்க மெயின்’ என்ற படத்திலும் தனுஷ் நடிக்கிறார். இதற்கு அடுத்ததாக தனுஷ்ஹெச் வினோத் இயக்கத்தில் இணைய உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.


மேலும் படிக்க | இந்தியன் 2 படத்தில் நடிக்க நடிகர் சித்தார்த் வாங்கிய சம்பளம் எவ்வளவு தெரியுமா?


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ