தேமுக தலைவரும், நடிகருமான கேப்டன் விஜயகாந்த் அவர்கள் சிறிது நாட்களுக்கு முன்பு காலமானார்.  இவரது இறப்பு தமிழகம் முழுவதும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது.  பலருக்கும் பல உதவிகளை கேட்காமல் செய்துள்ளவர் விஜயகாந்த். இவரது இறுதி ஊர்வலத்தில் ஏராளமானோர் கலந்து கொண்டு மரியாதை செலுத்தினர். மேலும் அரசு மரியாதையுடன் விஜயகாந்த் உடல் அவரது கோயம்பேடு அலுவலகத்தில் புதைக்கப்பட்டது.  பல சினிமா நட்சத்திரங்கள் நேரிலும், சமூக வலைத்தளங்கள் மூலமாகவும் தங்களது வருத்தத்தை பதிவு செய்தனர்.  இந்நிலையில், நடிகர் ராகவா லாரன்ஸ் ஒரு படி முன்னேறி போய் விஜயகாந்த் மகன் சண்முக பாண்டியன் நடிக்கும் படத்தில் நானும் இணைந்து நடிக்க தயார் என்று தெரிவித்துள்ளார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மேலும் படிக்க | சிம்புவுடன் நடித்தே தீருவேன் - அடம்பிடிக்கும் பிரபல நடிகை!


லாரன்ஸ் அவரது X தளத்தில் வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ளார். அதில், "நண்பர்களுக்கு வணக்கம்.. நானும் எனது தாயாரும் மறைந்த நடிகர் தே.மு.தி.க தலைவர் புரட்சிகலைஞர் கேப்டன் விஜயகாந்த் நினைவிடத்திற்கு கடந்த திங்கள் கிழமையைன்று நேரில் சென்று அஞ்சலி செலுத்திவிட்டு கேப்டன் இல்லத்திற்கு  சென்று அவரின் குடும்பத்தாருக்கு ஆறுதல் தெரிவித்தேன்.  அவர்களின் குடும்பத்தாரோடு உரையாடினேன், அப்போது விஜயகாந்தின் இளைய மகன் சண்முக பாண்டியன் சினிமாவில் நடித்து கொண்டிருப்பது பற்றி என்னிடம் சொன்னார்கள். திரையுலகைச் சேர்ந்த நீங்கள் எல்லோரும் தான் அவரைப் பார்த்துக்கொள்ள வேண்டும் என்று சொன்னார்கள். அவர்கள் சொன்ன அந்த வார்த்தை என்னை மிகவும் பாதித்தது. 


விஜய்காந்த சார் திரையுலகிற்கு செய்யாத உதவிகளே இல்லை. மற்ற ஹீரோக்கள் படத்தில் கேமியோ கெஸ்ட் ரோல் எல்லாம் செய்வார். அவர் பல ஹீரோக்களை வளர்த்து விட்டிருக்கிறார். அவர் நடித்த கண்ணுபடப் போகுதையா படத்தில் மூக்குத்தி முத்தழகு பாடலுக்கு நான் கோரியோகிராபி செய்திருக்கிறேன் ரொம்பவும் அழகான நடனமாடினார். என்னையும் ரொம்ப என்கிரேஜ் செய்தார். அப்படிப்பட்டவரின்  பையனுக்கு நான்  ஏதாவது செய்ய வேண்டும் என்று தோன்றியது.  சண்முக பாண்டியன் நடிக்கும் படம் வெளியாகும் போது முழு வீச்சில் வரவேற்பு தர நானே இறங்கி அனைத்து விளம்பர பணிகளையும் செய்ய ஆசைப்படுகிறேன். அந்தப்படக்குழு விருப்பப்பட்டால் அவர்களோடு படத்தின் விளம்பர விழாக்களில் கலந்துகொள்வேன். 


திரையுலகினருக்கு ஒரு வேண்டுகோள் யாராவது நல்ல டபுள் ஹீரோ சப்ஜெக்ட் இருந்தால் சொல்லுங்கள் சண்முகப்பாண்டியனோடு இணைந்து நடிக்கத் தயாராகா இருக்கிறேன். இது அவரது குடும்பத்திற்கு நான் செய்ய வேண்டிய கடமை, அப்போது அவரது ஆத்மா சந்தோசப்படும். இது என் மனதிற்கு தோன்றியது. அவரது மூத்த பிரபாகரன் அரசியலில் இருக்கிறார் அவரது எதிர்காலம் சிறப்பாக அமைய என் வாழ்த்துக்கள். இதை உங்களோடு பகிர்ந்து கொள்ள ஆசைப்ட்டேன்" என்று ராகவா லாரன்ஸ் கூறியுள்ளார். இது ரசிகர்கள் மத்தியில் அவரது இமேஜை இன்னும் உயர்த்தி உள்ளது.



மேலும் படிக்க | மிஷன் படம் எனக்கு ரொம்பவும் முக்கியமானது - இயக்குனர் விஜய்!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ