சிம்புவுடன் நடித்தே தீருவேன் - அடம்பிடிக்கும் பிரபல நடிகை!

நடிகை தேவயானி ஷர்மா வாழ்வில் என்னுடைய லட்சியம் என்னவென்றால் சிம்புவிற்கு ஜோடியாக நடிப்பதே ஆகும். இதற்கான ஒரு முழு வீச்சில் இறங்கி உள்ளேன் என்று கூறியுள்ளார்.

 

1 /5

டெல்லியை பூர்விகமாக கொண்ட நடிகை தேவயானி ஷர்மா, ஹிந்தி  மற்றும் தெலுங்கு திரையுலகங்களில் வலம் வருகிறார்.   2021 ஆம் ஆண்டு, ரொமான்டிக் என்ற தெலுங்கு திரைப்படத்தின் மூலம் இணை கதாநாயகியாக திரையுலகத்திற்கு அறிமுகமான இவர் பலவிதமான நாட்டிய கலைகளில்  தேர்ச்சி பெற்றிருக்கிறார்.    

2 /5

நடிகை தேவயானி ஷர்மா கூறுகையில்," ஹிந்தி, தெலுங்கு என்ற மொழிகளில் நான் படங்கள்   பண்ணுனாலும் எனக்கு தமிழில் படம் பண்ண வேண்டும் என்று ஆசை எப்பொழுதும் உள்ளது.   

3 /5

சாதாரண கதாநாயகியாக மட்டுமில்லாமல், என் நடிப்புத் திறனை முழுவதும் செயல்படுத்தி மக்கள் அனைவரும் விரும்பும் ஒரு நடிகையாக வலம் வர வேண்டும்.  கீர்த்தி சுரேஷ் சாய் பல்லவி இவர்களெல்லாம் எனக்கு மிகவும் பிடித்த நடிகைகள், இவர்கள்தான் எனக்கு  முன்னுதாரணம்.   

4 /5

வாழ்வில் என்னுடைய லட்சியம் என்னவென்றால் சிம்புவிற்கு ஜோடியாக நடிப்பதே ஆகும். இதற்கான ஒரு முழு வீச்சில் இறங்கி உள்ளேன், அதற்கான வேலையும் தொடங்கி விட்டது.   

5 /5

அதுமட்டுமின்றி மக்கள் நான் பார்க்கும் வேலையை அங்கீகரித்து என்னை ஏற்றுக் கொள்ள வேண்டும் என்பதே என்னுடைய வாழ்வின் லட்சியமாகும்.  இவ்வளவு குறிக்கோளும் நற்செயமும் கொண்ட தேவயானி தமிழ், தெலுங்கு,  ஹிந்தி என ஒரு கலக்கு கலக்குவார் என்பதில் எந்தவித சந்தேகமும் இல்லை.