உக்ரைனில் `RRR` டீம்: ராஜமெளலி புதிய தகவல்!
பாகுபலி பட இயக்குநர் ராஜமெளலி உக்ரைன் அனுபவம் குறித்துப் பகிர்ந்துள்ளார்.
பாகுபலி பட இயக்குநர் ராஜமெளலி உக்ரைன் அனுபவம் குறித்துப் பகிர்ந்துள்ளார்.
பாகுபலி படங்களின் வாயிலாகக் கவனம் ஈர்த்த இயக்குநர் ராஜமெளலி ஜூனியர் என்.டி.ஆர் மற்றும் ராம்சரணை வைத்து ஆர்.ஆர்.ஆர் எனும் படத்தை இயக்கியுள்ளார். அதிக பொருட்செலவில் பிரமாண்டமான முறையில் உருவாகியுள்ள இந்தப்படம் வருகிற 25ஆம் தேதி ரிலீஸ் ஆகவுள்ளது. இந்தியா மட்டுமல்லாது பல்வேறு நாடுகளில் அதிக திரையரங்குகளில் இப்படத்தை ரிலீஸ் செய்யப் படக்குழு திட்டமிட்டுள்ளது.
இந்நிலையில், இப்படம் குறித்துத் தெரிவித்துள்ள இயக்குநர் ராஜமெளலி, ஆர்.ஆர்.ஆர் படத்தின் சில முக்கியமான காட்சிகளை உக்ரைனில் படமாக்கியதாகவும், அந்த சமயத்தில் படப்பிடிப்பு நடத்துவதற்கு அனைத்து வசதிகளையும் கொண்ட நாடாக உக்ரைன் இருந்ததாகவும் குறிப்பிட்டுள்ளார். படப்பிடிப்பை நடத்தியபோது உக்ரைனை சேர்ந்த தொழில்நுட்பக் குழுவினர் சிலர் தங்களது படத்தில் இணைந்து பணியாற்றியதாகவும் தற்போது போர் நடப்பதால் அவர்கள் ஒவ்வொருவரையும் தொடர்புகொண்டு நலம் விசாரித்து வருவதாகவும் தெரிவித்தார். ரஷ்யா- உக்ரைன் இடையேயான போர் தனக்கு கவலை அளிப்பதாகவும் ராஜமெளலி கூறியுள்ளார்.
மேலும் படிக்க | கமல் படத்தில் ரஜினி பட கனெக்ஷன்! - தீயாய் பரவும் அப்டேட்!
உக்ரைனில் இந்தியத் திரைப்படங்கள் படமாக்கப்படுவது கடந்த சில ஆண்டுகளாக அதிகரித்து இருந்தது. நடிகர் கார்த்தி நடித்த தேவ், இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானின் கதையில் உருவான 99 சாங்க்ஸ் உள்ளிட்ட படங்கள்கூட உக்ரைனில் படமாக்கப்பட்டவையே. உக்ரைனில் ஷூட்டிங் நடத்த விதவிதமான லொகேஷன்கள் கிடைப்பதுடன், செலவுகளும் அந்நாட்டில் குறைவு எனும் காரணத்தால் உக்ரைனில் படப்பிடிப்பு நடத்த, திரைத்துறையினர் மிகுந்த ஆர்வம் காட்டிவந்தனர். அதேபோல அங்குள்ள உள்ளூர் நடிகர்களும் இந்தியப் படங்களில் தங்களது சிறப்பான பங்களிப்பை அளித்துவந்ததாகவும் கூறப்படுகிறது. இதனிடையே உக்ரைனில் போர் நிலவிவருவதால் இந்தியத் திரையுலகினர் தற்போது உக்ரைன் செல்லமுடியாத நிலை ஏற்பட்டுள்ளது. உக்ரைனில் படமாக்கத் திட்டமிட்டிருந்த பல இயக்குநர்கள் தற்போது அந்தக் காட்சிகளுக்காக வேறு நாடுகளைத் தேடவேண்டிய நிலையும் ஏற்பட்டுள்ளது.
மேலும் படிக்க | விஜய் 66 படத்தில் ‘விஜய்’ பட ஹீரோயின்?!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR