வெற்றிமாறன் இயக்கத்தில், ஆர்எஸ் இன்ஃபோடெயின்மென்ட் தயரிப்பில், சூரி நடிப்பில் கடந்த வெள்ளிகிழமையன்று (மார்ச் 31) அன்று உலகம் முழுவதும் வெளியான படம் 'விடுதலை-1'.  இப்படம் கலவையான விமர்சனங்களை பெற்று பாக்ஸ் ஆபீஸில் வசூலை குவித்து வருகிறது. இந்த படம் வயது வந்தோருக்கான 'ஏ' தணிக்கை சான்றிதழ் பெற்ற படமாக இருந்தாலும், திரையரங்கில் ரசிகர்கள் கூட்டம் அதிகமாக கணப்படுகிறது. சூரி வழக்கமான தனது பாணியில் இருந்து முற்றிலும் விலகி, முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இப்படத்திற்கு, இளையராஜா இசையமைத்துள்ளார். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

விடுதலை திரைப்படம் இரண்டு பாகங்களாக உருவாக்கப்பட்டுள்ளது. படத்தின் முதல் பாக பணிகள் நடைபெற்று கொண்டிருக்கும்போதே, இரண்டாம் பாகத்திற்கான பணிகளும் ஏறத்தாழ 90% நிறைவடைந்து விட்டதாக கூறப்படுகிறது. மேலும் இத்திரைப்படம் எழுத்தாளர் ஜெயமோகனின் 'துணைவன்' சிறுகதையை அடிப்படையாக வைத்து உருவாக்கப்பட்டது என கூறப்பட்ட போதிலும், திரைக்கதையில் பல்வேறு பணிகளை இப்படத்தின் எழுத்துக்குழு செய்துள்ளது. 


மேலும், படத்தின் இரண்டாம் பாகம் ரீலிஸ் தேதி குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் எனவும் தெரிகிறது. எனவே, முதல் பாகத்தின் வசூல் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. அந்தவகையில் 'விடுதலை-1' படம் வெளியான முதல் மூன்றே நாட்களில் தமிழ்நாட்டில் மட்டும் ரூ.14 கோடியும், உலகளவில் ரூ.23 கோடியும் வசூல் சாதனை புரிந்ததாக கூறப்பட்டது. இதனிடையே படம் பார்த்த பலர் படக்குழுவினரை பாராட்டியிருந்தனர். 


மேலும் படிக்க | சினிமாவில் காலடி எடுத்து வைத்த வெங்கட் பிரபுவின் மகள்


இந்த நிலையில், தற்போது ரஜினிகாந்த் விடுதலை-1 படத்தைப் பார்த்துள்ளார். இது தொடர்பாக அவரது ட்விட்டர் பக்கத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில், "விடுதலை... இதுவரை தமிழ்த் திரையுலகம் பார்த்திராத கதைக்களம். இது ஒரு திரைக்காவியம். சூரியின் நடிப்பு - பிரமிப்பு. இளையராஜா – இசையில் என்றும் ராஜா. வெற்றிமாறன் - தமிழ்த் திரையுலகின் பெருமை. தயாரிப்பாளருக்கு என்னுடைய வாழ்த்துகள். இரண்டாவது பாகத்திற்காக ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கிறேன்" எனப் பதிவிட்டுள்ளார். இந்நிலையில், வெற்றிமாறன், சூரி, தயாரிப்பாளர் எல்ரெட் குமார் மற்றும் எஸ்.தாணு ஆகியோரை நேரில் அழைத்து பாராட்டினார். இது தொடர்பான புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ளது.


மேலும் படிக்க | பிரபல நடிகருக்கு தொடரும் கொலை மிரட்டல்... பாதுகாப்புக்கு வெளிநாட்டு கார் - என்ன ஸ்பெஷல்?


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ