சினிமாவில் காலடி எடுத்து வைத்த வெங்கட் பிரபுவின் மகள்

Venkat Prabhu daughter: தமிழ் திரையுலகின் முன்னணி இயக்குனர்களில் ஒருவரான வெங்கட் பிரபுவின் மகள் திரையுலகில் அறிமுகமாகி உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Written by - Vijaya Lakshmi | Last Updated : Apr 8, 2023, 08:09 AM IST
  • இளம் வயதில் பாடலாசிரியராக அறிமுகம் ஆகும் ஷிவானி.
  • வெங்கட் பிரபு மகள் திரைதுறைக்கு அறிமுகம்.
  • வெங்கட் பிரபு 'சென்னை 28' படம் மூலம் இயக்குனராக அவதாரமெடுத்தார்.
சினிமாவில் காலடி எடுத்து வைத்த வெங்கட் பிரபுவின் மகள் title=

இயக்குனர் வெங்கட் பிரபுவிற்கு ஏகப்பட்ட ரசிகர்கள் இருக்கின்றனர். இவர் எடுத்த பெரும்பாலான படங்கள் அனைத்தும் ஹிட் தான். ஆரம்பத்தில் நடிகராக இருந்த வெங்கட் பிரபு பின்னர் 'சென்னை 28' படம் மூலம் இயக்குனராக அவதாரமெடுத்தார். இளையராஜா மற்றும் கங்கை அமரன் குடும்பத்தில் இருந்து சினிமாவில் ஜொலித்துவரும் நிலையில், அதில் வெங்கட் பிரபுவும் ஒருவர்.

அந்த வகையில் சமீபத்தில் இவர் சிம்புவை வைத்து மாநாடு படத்தை இயக்கினார். இந்த படம் 100 கோடி ரூபாய் வசூலித்து சாதனைப் படைத்தது. மாநாடு படத்தின் மாபெரும் வெற்றிக்குப் பிறகு நாக சைதன்யா நடிக்கும் அவரது 22வது படத்தை வெங்கட் பிரபு இயக்கி உள்ளார். இந்த படத்திற்குத் ‘கஸ்டடி’ எனப் பெயர் வைக்கப்பட்டுள்ளது. இப்படம், தமிழ் மற்றும் தெலுங்கு மொழியில் உருவாக்கப்பட உள்ளதாகச் சொல்லப்படுகிறது. மேலும் இப்படத்திற்கு இளையராஜா மற்றும் யுவன் சங்கர் ராஜா இணைந்து இசைக்க உள்ளனர்.

மேலும் படிக்க | இந்தியன் 2 ஷூட்டிங்..மாஸ் அப்டேட்டை வெளியிட்ட இயக்குனர் ஷங்கர்

இந்த நிலையில் ’கஸ்டடி’ படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் இறுதி கட்டத்தில் உள்ள நிலையில் இந்த படத்தில் வெங்கட் பிரபுவின் மகள் ஸ்ரீ ஷிவானி ஒரு பாடலை எழுதியுள்ளதாக தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது. ’கஸ்டடி’ திரைப்படம் மூலம் பாடலாசிரியராக வெங்கட் பிரபுவின் மகள் ஸ்ரீ ஷிவானி எழுதிய பாடல் வரும் 10 ஆம் தேதி ரிலீஸாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இளம் வயதில் பாடலாசிரியராக அறிமுகம் ஆகும் ஷிவானிக்கு வாழ்த்துக்கள் குவிகின்றன.

இசைஞானி இளையராஜா மற்றும் கங்கை அமரன் குடும்பத்தைச் சேர்ந்த பலர் தற்போது திரையுலகில் ஜொலித்து வருகின்றனர். யுவன்ஷங்கர் ராஜா, கார்த்திக் ராஜா, பவதாரிணி, வெங்கட் பிரபு, பிரேம்ஜி ஆகியோர் திரையுலகில் உள்ளனர். அந்த வகையில் தற்போது வெங்கட் பிரபு மகள் திரைதுறைக்கு அறிமுகமாகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க | விடுதலை படத்தில் ஆயிரம் குறைகள் உள்ளன... வெற்றிமாறன் கூறும் உண்மை என்ன?

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News